விருப்பப்பட்டோ, தேடிப்போய் பார்க்க வேண்டிய தொலைவிலோ இன்றைக்கு ஆபாசப்படங்கள் இல்லை. அவை நம் கைகளில் இருக்கின்றன. நம் குழந்தைகளின் கைகளிலும் ஸ்மார்ட்போனாக தவழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால், என்னென்ன பிரச்னைகள் வரலாம் என்பதுபற்றி பாலியல் மருத்துவர் காமராஜ் விளக்குகிறார். ``ஆபாசப்படங்கள் பார்ப்பதை பாலியல் பிறழ்வுகளில் ஒன்று என்றுதான் 1990-களில் சொல்லிக் கொண்டிருந்தோம். அதிலிருந்து மீண்டு வருவதற்கு சிகிச்சையும் அளித்துக் கொண்டிருந்தோம். ஆனால், இன்றைக்கு ஆபாசப்படங்கள் பார்க்காதவர்கள் கிட்டத்தட்ட யாருமே கிடையாது என்பதால், இதைத் தவறு என்று சொல்வதையும், பாலியல் பிறழ்வு என்று சொல்வதையும் நிறுத்திவிட்டோம். ஆனால், தொடர்ந்து ஆபாசப்படங்கள் பார்ப்பது, அவற்றைப் பார்க்காமல் இருக்க முடியாதது, அந்தப் படங்களுக்கு அடிமையாவது போன்றவற்றால் ஆண்களுக்கு வரக்கூடிய பிரச்னைகளும், இந்த ஆண்களால் பெண்கள் சந்திக்கின்ற பிரச்னைகளும் ஏராளம். porn movies அது கண்ணாடி வளையலில் பட்டுநூல் சுத்துற மாதிரி... | காமத்துக்கு மரியாதை - 174 டீன் ஏஜின் ஆரம்பத்திலேயே இந்தக் கால குழந்தைகளுக்கு, ஆபாசப்படங்களைப் பார்ப்பதற்கான வாய்ப்...