Skip to main content

Doctor Vikatan: அளவுக்கதிக களைப்பு... பணியிடத்தில் தூக்கம்.. ஏதேனும் நோயின் அறிகுறியா?

Doctor Vikatan:  நான் 36 வயதுப் பெண். வேலை பார்க்கிறேன்.  பகல் வேளைகளில் எப்போதும் களைப்பாக உணர்கிறேன். இரவில் 7 மணி நேரம் தூங்குகிறேன். ஆனாலும், காலையில் எழுந்திருந்த பிறகும் புத்துணர்வாக உணர முடிவதில்லை. என் களைப்பு காரணமாக வேலையிலும் சிரமங்களைச் சந்திக்கிறேன். பணியிடத்தில் தூக்கம் வருகிறது. அதீத களைப்பு என்பது ஏதேனும் பெரிய பிரச்னையின் அறிகுறியாக இருக்குமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

மருத்துவர் அருணாசலம்

களைப்பாக உணர ஒவ்வொருவருக்கும் காரணங்கள் வேறுபடலாம். ஒரு நாளைக்கு நமக்குத் தேவையான உணவை சரியானதாகவும் சரியான நேரத்திலும் சாப்பிட வேண்டியது ஆரோக்கியத்துக்கு அடிப்படை. இரவில் வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு, பகலில் பட்டினி கிடப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு பகலில் எனர்ஜி குறைவாக இருக்கும். எனவே, ஒவ்வொரு வேளை உணவுக்கும் சரியான இடைவெளி முக்கியம்.

அடுத்தது உறக்கம். ஆரோக்கியமான நபருக்கு 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் போதுமானது. ஆனால், சிலர் 8 மணி நேரம் தூங்கினாலும் அடுத்தநாள் காலையில் களைப்புடனேயே எழுந்திருப்பார்கள். உடல் பருமனானவர்களுக்கும் ஆழ்ந்த தூக்கம் சாத்தியமாகாமல் போகலாம். அவர்களுக்கு 'ஸ்லீப் ஆப்னியா' (Sleep apnea) என்ற பிரச்னை இருக்கலாம். அதாவது தூங்கும்போதே ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகலாம். குறட்டை விடுவார்கள், திடீரென சுவாசிப்பதை நிறுத்திவிடுவார்கள்.

இப்படிப்பட்ட பிரச்னை உள்ளவர்களுக்கு 'ஸ்லீப் ஸ்டடி' (Sleep Study) என்ற பரிசோதனையில் தூக்கத்தை ஆய்வுசெய்தால்,  தூங்கும்போது ஆக்ஸிஜன் குறைவாக இருப்பது தெரியவரும். இவர்களுக்கு சிபாப் (CPAP Machine) என்ற மெஷினை முகத்தில் மாட்டிக்கொண்டு தூங்கச் சொல்வோம். இவர்களுக்கெல்லாம் இதயநோய், மாரடைப்பு போன்றவை வரும் ரிஸ்க் அதிகம். போதுமான அணவு தண்ணீர்  குடிக்காதவர்களுக்கும் களைப்பு அதிகமிருக்கலாம். தூக்கத்தோடு சேர்த்து உப்பும் இவர்களுக்குத் தேவையாக இருக்கலாம்.  இவர்கள் ஓஆர்எஸ் பவுடர், சாதம் வடித்த கஞ்சியில் உப்பு சேர்த்தது, நீர்மோர் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைக் குடித்தால் களைப்பு நீங்கும். 

பணியிடத்தில் தூக்கம்

இந்தியாவில் 50 சதவிகிதத்தினருக்கும் மேல் ரத்தச்சோகை இருக்கிறது. குறிப்பாக, பெண்களில் 10-ல் 6 பேருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பது ஆய்வுகளில் தெரிகிறது. ரத்தச்சோகை இருக்கும் பெண்கள் எப்போதும் களைப்பாக உணர்வார்கள். இவர்கள் எல்லோரும் தினமும் கொத்தமல்லி சட்னியோ, கறிவேப்பிலை சட்னியோ, புதினா சட்னியோ செய்து சாப்பிட வேண்டியது மிக அவசியம். வாரத்தில் 3-4 நாள்களுக்கு கீரை சாப்பிட வேண்டும். வாரம் ஒருநாளாவது அகத்திக்கீரையோ, முருங்கைக்கீரையோ சாப்பிடலாம். இவையெல்லாம் ரத்தச்சோகை வராமல் தடுக்கும்.

ஹைப்போதைராய்டிசம் பாதிப்புள்ள பெண்களுக்கும் எப்போதும் களைப்பு இருக்கலாம். எனவே, நீங்கள் களைப்பாக உணர்வதற்கு மேற்குறிப்பிட்டவற்றில் எந்தக் காரணம் உங்களுக்கு இருக்கக்கூடும் என்பதைப் பார்த்து, அதற்கேற்ப சிகிச்சைகள், உணவுப்பழக்கம், வாழ்வியல் முறைகளை மாற்றிக்கொண்டாலே தானாகச் சரியாகும். மருத்துவரை அணுகி அடிப்படையான பரிசோதனைகளைச் செய்து பாருங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...