Doctor Vikatan: எப்போதும் எதிர்மறை எண்ணங்கள் மனதை ஆக்கிரமிக்கின்றன. அதிலிருந்து விடுபட எவ்வளவு முயற்சி செய்தாலும் முடியவில்லை. இதனால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. இதற்குத் தீர்வுதான் என்ன? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் மிதுன் பிரசாத் மனநல மருத்துவர் மிதுன் பிரசாத் தேவையற்ற அல்லது எதிர்மறையான எண்ணங்கள் அதிகமாகத் தோன்றினால், அது 'ஓசிடி' எனப்படும் 'அப்சசிவ் கல்பல்சிவ் டிஸ்ஆர்டர்' ( Obsessive-Compulsive Disorder) போன்ற ஏதேனும் ஒரு பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். அதாவது, நாம் எந்தவொரு விஷயத்தைப் பற்றி நினைக்கக்கூடாது அல்லது யோசிக்கக்கூடாது என்று கருதுகிறோமோ, அந்த விஷயம் நம் கட்டுப்பாட்டையும் மீறி மீண்டும் மீண்டும் நம் மனதிற்குள் வந்துகொண்டே இருப்பதைத்தான் நாம் விரும்பாத, நம்மை பயமுறுத்தும் எண்ணங்கள் (Intrusive Thoughts) என்கிறோம். உங்களுக்குத் தோன்றும் எதிர்மறை எண்ணங்கள் (Negative thoughts) இதன் அறிகுறியாகவும் இருக்கலாம். 'நாம் ஏன் உண்மையில் உயிரோடு இருக்கிறோம்?', 'நாம் ஏன் இந்த வாழ்க்கையை வாழ வேண்டும்?', 'நாம் ஏன...