Skip to main content

Posts

Showing posts with the label Sports News

Dhoni: "இன்னும் கொஞ்ச நாள் இருக்கு; ஆனா..!" - ஓய்வு பற்றிப் பேசிய தோனி

சேப்பாக்கத்தில் நடைபெற்ற குவாலிபயரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறது. Dhoni | தோனி போட்டியில் வென்ற பிறகு பரிசளிப்பு நிகழ்வில் ஹர்ஷா போக்லேவுடன் பேசிய தோனி, போட்டியில் வென்றது குறித்தும் தனது ஓய்வு குறித்தும் பேசியிருக்கிறார். 'இது மற்றுமொரு இறுதிப்போட்டி என அத்தனை எளிதாக கூறிவிட மாட்டேன். நாங்கள் இதற்காக 2 மாதங்களாக கடினமாக உழைத்திருக்கிறோம். ஏற்ற சூழல் வாய்க்கும் பட்சத்தில் ஜடேஜாவின் பந்துகளை எதிர்கொள்வது கடும் சிரமமாக இருக்கும். அவரது பந்துவீச்சுதான் இன்று ஆட்டத்தையே மாற்றியது. Dhoni | தோனி உங்களின் பந்துவீச்சின் செறிவைத் தொடர்ந்து தேடுங்கள் என்பதையே இளம் பந்துவீச்சாளர்களுக்கு அறிவுரையாகக் கூறுகிறோம். ஃபீல்டிங்கை செட் செய்யும் விதத்தில் நான் கொஞ்சம் எரிச்சலூட்டக்கூடிய கேப்டனாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன். ஆனால், என் உள்ளுணர்வு சொல்வதைக் கேட்டு நான் அதைச் செய்கிறேன். என் மீது ஒரு கண்ணை தொடர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள் என்பதே ஃபீல்டர்களுக்கு நான் கூறியிருக்கும் செய்த...

CSK யை சேப்பாக்கத்தில் வீழ்த்துவோம்; இறுதிப்போட்டிக்குச் செல்வோம் -ஆட்டநாயகன் கில் சூளுரை!

நேற்று நடைபெற்ற போட்டியில் டூ ப்ளெஸ்ஸி தலைமையிலான பெங்களூர் அணி ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி பெங்களூர் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது. குஜராத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சுப்மன் கில்  52 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் ஐந்து பவுண்டரிகள் உட்பட 104 ரன்கள் குவித்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் ஆட்டநாயகன் விருதைப் பெற்றிருந்தார்.  சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதைப் பெற்ற பிறகு பேசிய சுப்மன் கில், “ நான் சிறந்த ஃபார்மில் இருக்கிறேன். இந்த சீசனின் முதல் பாதியில் எனக்குக் கிடைத்த நல்ல தொடக்கத்தை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் கிடைத்த நல்ல தொடக்கமாக, பெரிய ஸ்கோராக மாற்ற முடிந்தது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.  டி20 போட்டிகளில்  தொடர்ந்து ஷாட்களை ஆட வேண்டும். இன்றைய போட்டியில் புதிய பந்து எனக்கு கொஞ்சம் பிடித்திருந்தது. அதனால் பேட்டிங் செய்யவதற்கும்  ஈஸியாக இருந்தது. என்னுடைய பேட்டிங் அணுகுமுறை பற்றி எனக்கு நன்றாகத் தெரிய...

SRH vs RCB: தலைவன் ஒருவன் பெரும் `ரன் சேஸ்' கலைஞன்; விராட் கோலி சதத்தால் பிளேஆப் ரேசில் தொடரும் RCB!

இந்த ஐபிஎல் சீசனில் இன்னும் 6 லீக் போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில் 7 அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கான போட்டியில் இன்னும் பலப்பரீட்சையில் உள்ளன. இத்தகைய விறுவிறுப்பான சூழ்நிலையில் இந்த ஐபிஎல் சீசனின் 65-ம் போட்டியில் RCB மற்றும் SRH அணிகள் மோதிக்கொண்டன. எஞ்சிய 2 போட்டிகளில் கட்டாயம் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் RCBயும், இதுவரை ஹோம் கிரவுண்டில் விளையாடிய 6 போட்டியில் ஒரே ஒரு வெற்றி என்ற மோசமான சாதனையைத் தொடரவிடக் கூடாது என்ற மானமீட்பு போராட்டத்தில் SRH-ம் ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சையில் இறங்கின. டாஸ் ஜெயித்த RCB பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. RCB vs SRH இந்த சீசனில் பவர்பிளேயில் 9 விக்கெட்டுகள் எடுத்து பந்து வீச்சில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் சிராஜ், முதல் ஓவரை வீச, அபிஷேக் ஷர்மா மற்றும் ராகுல் திரிபாதி தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். முதல் ஓவரில் வெறும் 2 ரன்களை மட்டுமே கொடுத்து அட்டகாசமான தொடக்கத்தைத் தந்தார் சிராஜ். RR-க்கு எதிரான முந்தைய போட்டியில் 3-10 என ராஜபாட்டையைக் கிளப்பிய பார்னலின் 2வது ஓவரை 'ராஜபாட்டை' திரைப...

Dhoni: கவாஸ்கர் சட்டையில் ஆட்டோகிராஃப்; ரசிகர்களுக்கு கிஃப்ட்; சேப்பபாக்கில் நெகிழ்ந்த தோனி!

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதிய போட்டியில் கொல்கத்தா அணி வென்றிருந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி ஆடும் கடைசி லீக் போட்டி இதுதான் என்பதால் போட்டி முடிந்த பிறகு கொஞ்சம் ஸ்பெசலான விஷயங்களெல்லாம் நடந்திருந்தது. தோனி போட்டி முடிந்த பிறகு தோனி உட்பட சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி கூறும் விழா முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திட்டமிடப்பட்டதை போலவே போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு விழாவெல்லாம் முடிந்த பிறகு தோனி தனது வீரர்களுடன் ட்ரெஸ்ஸிங் ரூமிலிருந்து மைதானத்திற்குள் என்ட்ரி கொடுத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் இதற்கிடையில் மைதானம் முழுவதும் `எல்லோருக்கும் நன்றி', (Yellowrukkum Nandri) `மீண்டும் சந்திப்போம்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளெல்லாம் வைக்கப்பட்டிருந்தது. `எங்கள் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு நன்றி...' போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை சிஎஸ்கே வீரர்களே ஏந்தியும் வந்தனர். CSK முட்டி வலியால் அவதியுறும் தோனி காலில் ஒரு கட்டுடன் நடந்து வந்து ரசிகர்களுக்கு நன்றி கூறினார். ம...

Yashasvi Jaiswal: 6,6,4,4,2,4 `பார்த்தேன். வியந்தேன்...' யாஷஸ்வியைக் கொண்டாடும் கிரிக்கெட் உலகம்!

கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடியாக வென்றிருக்கிறது. 150 ரன்கள் டார்கெட்டை 13.1 ஓவர்களிலேயே ராஜஸ்தான் அணி சேஸ் செய்திருக்கிறது. இந்த அதிரடி வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால்தான். 47 பந்துகளில் 98 ரன்களை எடுத்து அகத்தியிருந்தார். இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே 26 ரன்களை அடித்திருந்தார். யாஷஸ்வியின் இந்த அதிரடியை பார்த்து கிரிக்கெட் உலகை சார்ந்த பலருமே வியப்போடு தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த இன்னிங்ஸை ஆடிக்கொண்டிருக்கும் போதே விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரியை பதிவிட்டிருந்தார். அதில், 'சமீபத்தில் நான் பார்த்து வியந்த மிகச்சிறப்பான இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று. யாஷஸ்வி, ஒரு பெரும் திறமையாளன்' என பதிவிட்டு யாஷஸ்வியின் புகைப்பட்டத்தையும் போட்டிருந்தார். மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ், 'மிகச்சிறப்பான இன்னிங்ஸ். மிகச்சிறப்பான வீரர். தலைவணங்குகிறேன்' என யாஷஸ்வியை டேக் செய்து ட்வீட் செய்திருந்தார் சூர்யா. யாஷஸ்வியின் அதிரடியை பற்றியும் பட்லரின் ரன் அவுட் பற்றியும் பதிவிட்டிரு...

CSK v DC: “கடைசி மூன்று ஓவர்கள்தான் எங்கள் டார்கெட்!” - திட்டத்தை விளக்கிய தோனி - ஃபிளெமிங்

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கெதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை அணி. இவ்வெற்றியின் மூலம் 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. கொல்கத்தா அணிக்கெதிரான ஒரு ஹோம் கேம் உட்பட இன்னும் இரண்டு லீக் போட்டிகள் மீதமிருப்பதால் சென்னை அணியின் பிளே-ஆப் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.  MS Dhoni போட்டி முடிந்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ்.தோனி ஆடுகளத்தின் தன்மை தொடங்கி அணியில் தனக்கான பங்களிப்பு வரை பல விஷயங்களைப் பற்றிப் பகிர்ந்தார். “உண்மையில், இந்த ஸ்கோர் போதுமானதா என்று எங்களுக்குத் தெரியவில்லை. அதனாலேயே, விக்கெட் எடுப்பதைக் காட்டிலும் உங்களின் சிறந்த பந்துகளை வீசுவதில் அதிக கவனம் செலுத்துங்கள் என்று என் பௌலர்களிடம் அறிவுறுத்தினேன். இந்த ஆடுகளத்தில் 170 என்பது நல்ல ஸ்கோராகத் தெரிந்தாலும் இன்னும் கூடுதல் ரன்களை நாங்கள் அடித்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். இரண்டாம் பாதியில் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு நன்கு உதவியது. அதை முடிந்தவரையில் பயன்படுத்திக் கொண்டோம்.” என்றார். இதைத்தொ...

RRvSRH: ஆர்ப்பரிப்பை அமைதியாக்கிய சைரன் சத்தம்; ஆட்டத்தின் ஒரே நோபால் போட்டியின் முடிவை மாற்றியதா?!

``You can never never feel, you have won the game until you have won it" நேற்றைய போட்டியின் தோல்விக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இதைச் சொல்லியிருக்கிறார் கேப்டன் சஞ்சு சாம்சன். ஐ.பி.எல் வெற்றி, தோல்வி இடையேயான வித்தியாசம் அந்த 2 புள்ளிகள் மட்டுமல்ல. ஒரு தவறான பந்து, ஒரு கேட்ச் ட்ராப், ஒரு தவறான ஷாட், ஒரு தவறான கணிப்பு அனைத்தையும் மாற்றிவிடும் என்கிற நிதர்சனம் மீண்டும் மீண்டும் அரங்கேறியிருக்கிறது. மேலும் ஒரு த்ரில், மேலும் ஒரு கடைசி பந்து வெற்றி. RRvSRH பழைய பட்லரின் ஆட்டம், சஞ்சு சாம்சனின் சிறப்பான பேட்டிங், சாஹலின் அற்புதமான ஸ்பெல் அனைத்துமிருந்தும் ஆட்டம் ராஜஸ்தானின் கைவிட்டுப் போயிருக்கிறது. ராஜஸ்தானின் இந்த தோல்வி சில அணிகளின் ப்ளே- ஆப் நம்பிக்கையைக் கொடுத்திருந்தாலும் இந்த கடைசி நேர பரபர முடிவுகள் பலருக்கு அதிரச்சியையும் கொடுத்திருக்கலாம். இந்த சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் அணி விளையாடி முதல் 5 போட்டிகளில் ஒரு தோல்வி 4 வெற்றிகளுடனும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. கடந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு விளையாடிய கடைசி 5 ஆட்டங்களில் ஒரு வெற்றி 4 தோல்விகளு...

CSKvMI: வெயிலோடு உறவாடிய மும்பை; தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்; பயிற்சியில் என்ன நடந்தது?

ஐ.பி.எல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக நேற்று மாலை இரண்டு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் பயிற்சி செஷனில் என்னெவெல்லாம் நடந்தது? Ishan Kishan முன்னதாக மும்பை அணிக்கான பயிற்சி செஷன் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் பயிற்சி செஷனுக்கு முன்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு மும்பை அணியின் சார்பில் இஷான் கிஷன் வந்திருந்தார். சென்னை பிட்ச் பற்றியும் அடுத்தடுத்து தாங்கள் செய்த 200+ சேஸ் பற்றியும் சில நிமிடங்கள் பத்திரிகையாளர்களிடம் உரையாடிவிட்டு இஷான் கிஷன் பயிற்சிக்குக் கிளம்பினார். வழக்கமாக சேப்பாக்கத்திற்கு வரும் அணிகள் எப்போதுமே ஐந்து அல்லது ஐந்தறை மணிக்கு மேல்தான் பயிற்சியையே ஆரம்பிப்பார்கள். ஆனால், மும்பை அணி 4 மணிக்கு முன்னதாகவே பயிற்சியைத் தொடங்கியதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா என விசாரித்தோம். அப்போது இது சார்ந்து சில தகவல்களும் அணியின் தரப்பிலிருந்து கிடைத்தன. "போட்டி மூன்றரை மணிக்கு தொடங்குவதால...

Varun Chakravarthy: 200ஐ தொட்ட இதயத்துடிப்பு, தீட்டப்பட்ட பலே திட்டம்; டெத் ஓவரில் வென்றது எப்படி?

"அந்தக் கடைசி ஓவரின் போது என்னுடைய இதயத்துடிப்பு 200 ஐ தொட்டுவிட்டது!" என அதிர்ச்சி விலகாமல் பேசியிருக்கிறார் நேற்றைய நாளின் நாயகன் வருண் சக்கரவர்த்தி. சன்ரைசர்ஸ் ஹைதரபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. பெரிதாக சுவாரஸ்யம் எதுவும் இருக்கப்போவதில்லை என நினைக்கப்பட்ட இந்தப் போட்டி அந்த அத்தனை எண்ணங்களையும் முறியடித்திருக்கிறது. Varun Chakravarthy | வருண் சக்கரவர்த்தி ஆம், கடைசிப்பந்து வரை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்ற இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. கொல்கத்தா அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியே. கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 171 ரன்களை எடுத்திருந்தது. சன்ரைசர்ஸூக்கு 172 ரன்கள் டார்கெட். சேஸிங்கின் போது சன்ரைசர்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் ரன்ரேட்டையும் சரியாக மெயிண்டெயின் செய்து வந்தனர். கடைசி 5 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 37 ரன்கள் மட்டும்தான் தேவை...

Motivation Story: ஒரு ரூபாய் கிரிக்கெட்... வாங்கிய அடி... அம்மாவின் ஆசை... நின்று விளையாடும் ஜடேஜா!

` `நான் ஒரு சிறந்த மனிதன்’ என்று என்னை நான் நினைத்ததேயில்லை.’ - ரவீந்திர ஜடேஜா `ஜட்டு’, `ராக்ஸ்டார்’, `சர் ஜடேஜா’... எத்தனையோ செல்லப் பெயர்கள் ரவீந்திர ஜடேஜாவுக்கு. இவற்றில் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மனமுவந்து பாராட்டி வைத்த பெயர்தான் `ராக்ஸ்டார்.’ அந்தப் பட்டத்துக்கான முழுத்தகுதியும் உடையவர் ஜடேஜா. இந்தப் புகழும் பெருமையும் அத்தனை எளிதாக அவருக்குக் கிடைத்துவிடவில்லை. அவர் கடந்து வந்தது சாதாரணப் பாதை அல்ல... பாதங்களைப் பதம் பார்க்கும் முட்கள் நிறைந்த கருவேலங்காடு. ஒரு சராசரி மனிதனாக இழப்புகள், அவமானங்கள், பிரச்னைகள் என அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். போராடிப் போராடித்தான் தன்னை கிரிக்கெட்டில் நிலைநிறுத்திக்கொண்டார் ஜடேஜா. ஜடேஜா குஜராத்திலுள்ள, ஜாம்நகர் மாவட்டத்திலிருக்கும் நவாகம் கெட் (Navagam Ghed) என்ற ஊரில், 1988, டிசம்பர் 6-ம் தேதி பிறந்தவர் ஜடேஜா. பெயர்தான் `குஜராத்தி ராஜ்புத்’ குடும்பம். ஆனால், குடும்பம் மொத்தமும் அம்மா லதாபென் கொண்டு வரும் சம்பளத்தில்தான் ஓடிக்கொண்டிருந்தது. லதா, நர்ஸாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்பா அனிருத் (Anirudhsinh), கிடைத்த வே...

MI vs RR: ஜெய்ஸ்வாலின் `துணிவு'; டிம் டேவிட்டின் `விடா முயற்சி'; அல்டிமேட் வெற்றி பெற்ற மும்பை!

நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, "சென்ற வருடம் அவரின் ஆட்டத்தைப் பார்த்தேன். இந்த வருடம் அது இன்னும் மேம்பட்டிருக்கிறது. உனக்கு எப்படி இந்த பவர் வந்தது எனக் கேட்டேன். அவர் ஜிம்முக்கு செல்வதாகக் கூறினார். அது நல்லது, அவருக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கு, ராஜஸ்தான் ராயல்ஸுக்கு என எல்லாருக்கும்தான்" என ஜெய்ஸ்வாலின் ஆட்டம் குறித்து தெரிவித்திருந்தார். MI vs RR ஐ.பி.எல்-இல் தன்னை நிரூபிக்கிற இளைஞன் அடுத்ததாக இந்திய அணியில் இடம்பெறுவான் என்கிற வகையில் அவர் பேசியிருப்பார். 1000 போட்டிகள் கண்ட ஐ.பி.எல் இன் குறிப்பிடத்தக்க அம்சம் என்பது இதுதான். வியாபாரம், பொழுதுபோக்கு, அரசியல், விளம்பரம், ஊழல், குற்றச்சாட்டுகள் என ஐ.பி.எல் குறித்த பல விமர்சனங்களுக்கு மத்தியில் திறமை வாய்ந்த பல இளைஞர்களை ஐ.பி.எல் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருப்பதை மறுக்க முடியாது. ஆட்டோக்காரரின் மகன், கேஸ் சிலிண்டர் சுமப்பவரின் மகன், வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி கூட இல்லாதவர்கள் என எளிய குடும்பத்து இளைஞர்கள் ஐ.பி.எல்-இன் வழியே அடையாளப்பட்டிருக்கிறார்கள். Rohit S...