நேற்று நடைபெற்ற போட்டியில் டூ ப்ளெஸ்ஸி தலைமையிலான பெங்களூர் அணி ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி பெங்களூர் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது. குஜராத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சுப்மன் கில் 52 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் ஐந்து பவுண்டரிகள் உட்பட 104 ரன்கள் குவித்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் ஆட்டநாயகன் விருதைப் பெற்றிருந்தார்.
ஆட்டநாயகன் விருதைப் பெற்ற பிறகு பேசிய சுப்மன் கில், “ நான் சிறந்த ஃபார்மில் இருக்கிறேன். இந்த சீசனின் முதல் பாதியில் எனக்குக் கிடைத்த நல்ல தொடக்கத்தை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் கிடைத்த நல்ல தொடக்கமாக, பெரிய ஸ்கோராக மாற்ற முடிந்தது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. டி20 போட்டிகளில் தொடர்ந்து ஷாட்களை ஆட வேண்டும். இன்றைய போட்டியில் புதிய பந்து எனக்கு கொஞ்சம் பிடித்திருந்தது.
அதனால் பேட்டிங் செய்யவதற்கும் ஈஸியாக இருந்தது. என்னுடைய பேட்டிங் அணுகுமுறை பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். மேலும் எந்தெந்த பக்கங்களில் என்னால் அடிக்க முடியும் என்றும் தெரியும். அதற்கேற்றவாறு பேட்டிங் செய்தேன். சிஸ்கே அணியை சேப்பாக்கம் மைத்தானத்தில் எதிர்கொள்வதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். எங்களது அணியில் சிறந்த பவுலிங் அட்டாக் இருக்கிறது. அதனைப் பயன்படுத்தி சிஸ்கே அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக பைனலுக்கு செல்வோம் என்று நம்புகிறேன் ” என்று பேசியிருக்கிறார்.
Comments
Post a Comment