சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவிருக்கிறது. இதற்கான தொடக்க விழா இன்று மாலை 6 மணிக்கு (ஜூலை 28) நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த போட்டி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த செஸ் திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடும் விதமாகத் தலைநகர் சென்னையிலும், வேறு சில மாவட்டங்களிலும் செஸ் வடிவிலான அலங்காரங்கள், விளம்பரங்கள், கலை நிகழ்ச்சிகளை தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது.செஸ் போட்டி தொடக்க விழாவில்... இந்த நிலையில், சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல்செய்தார். அதில், ``சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரத்தில் இந்தியப் பிரதமர், குடியரசுத் தலைவர் என யாருடைய புகைப்படத்தையும் பயன்படுத்தாமல் ஆளும் தி.மு.க அரசு தனக்கான அரசியல் ஆதாயத்தைத் தேடும் நிகழ்வாக பயன்படுத்திக்கொண்டுள்ளது. எனவே, இந்த போட்டிக்கான ...