Skip to main content

செஸ் விளம்பரம்: ``பிரதமர் புகைப்படம் இடம்பெறுவதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும்!" - நீதிமன்றம்

சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவிருக்கிறது. இதற்கான தொடக்க விழா இன்று மாலை 6 மணிக்கு (ஜூலை 28) நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த போட்டி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த செஸ் திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடும் விதமாகத் தலைநகர் சென்னையிலும், வேறு சில மாவட்டங்களிலும் செஸ் வடிவிலான அலங்காரங்கள், விளம்பரங்கள், கலை நிகழ்ச்சிகளை தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது.செஸ் போட்டி தொடக்க விழாவில்... இந்த நிலையில், சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல்செய்தார். அதில், ``சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரத்தில் இந்தியப் பிரதமர், குடியரசுத் தலைவர் என யாருடைய புகைப்படத்தையும் பயன்படுத்தாமல் ஆளும் தி.மு.க அரசு தனக்கான அரசியல் ஆதாயத்தைத் தேடும் நிகழ்வாக பயன்படுத்திக்கொண்டுள்ளது. எனவே, இந்த போட்டிக்கான விளம்பரத்தில் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்களைச் சேர்க்க வேண்டும். பொதுமக்களின் பணத்தை தங்களுக்கு ஆதாயமாகப் பயன்படுத்தி விளம்பரம் செய்ததால் ஆளும் அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.செஸ் விளம்பரத்தில் பிரதமர் படம் இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வு, ``சர்வதேச அளவில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமரின் படங்கள் இடம்பெற வேண்டும் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. எனவே, சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்கள் இடம்பெறுவதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்யவேண்டும்.மதுரை நீதிமன்றம் பொதுமக்களின் உணர்வுகளைப் மதிப்பதும், சர்வதேச அளவிலான இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தி, அழியாத முத்திரையை பெற்று தருவதும் ஒருங்கிணைப்பாளரின் சிறந்த மன்னிப்பாக அமையும். குடியரசுத் தலைவர், பிரதமரின் படங்கள் விளம்பரத்தில் வைக்கப்படும் போது யாரேனும் அதைச் சேதப்படுத்தினால் அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர்.பிரதமர் மோடி வருகைக்கு எதிராகப் பதிவிட்டாலே போலீஸ் நடவடிக்கையா? - காவல்துறை விளக்கம்!
http://dlvr.it/SVgGqb

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...