Doctor Vikatan: எனக்கு கடந்த சில வருடங்களாக ஒற்றைத் தலைவலி இருக்கிறது. எப்போதெல்லாம் தலை வலிக்கிறதோ, அப்போதெல்லாம் பெயின் கில்லர் எடுத்துக்கொண்டால்தான் வலி குறையும். இப்போது சில நாள்களாக மாத்திரை எடுத்துக்கொண்ட பிறகு வலி இன்னும் அதிகமாவது போல உணர்கிறேன். இதை எப்படிப் புரிந்துகொள்வது... மாத்திரை இல்லாமல் வலியை எப்படிச் சமாளிப்பது? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் ஞானசண்முகம் தலைவலியைத் தாங்க முடியாத நிலையில்தான் பெயின் கில்லர் எனப்படுகிற வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வோம். ஒரு கட்டத்தில் அந்த வலி நிவாரணிகள் அளவுக்கு அதிகமாகும்போது அவையே தலைவலியை ஏற்படுத்தலாம். இத்தகைய வலியை 'மெடிக்கேஷன் ஓவர்யூஸ் ஹெட்டேக்' (Medication overuse headache) என்கிறோம். பெயின் கில்லர் மருந்துகள் என நாம் பொதுவாகக் குறிப்பிடுபவை, பாராசிட்டமால் மற்றும் என்எஸ்ஏஐடி (NSAIDs) மருந்துகள்தான். இவற்றை அடிக்கடியும் அதிக அளவிலும் பயன்படுத்தும்போது அவையே வலியைத் தூண்டும் காரணிகளாக மாறலாம். அதாவது இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது தற்காலிகமாக வலி குறைவதுபோல உணர்வார்க...