Doctor Vikatan: என் வயது 32. எங்கள் குடும்பத்தில் பிறந்த வீட்டுப் பக்கமும் சரி, புகுந்த வீட்டுப் பக்கமும் சரி, யாருக்கும் டயாபட்டீஸ் இல்லை. ஆனால், நான் கர்ப்பமாக இருந்தபோது எனக்கு டயாபட்டீஸ் வந்தது. அது குறித்துப் பெரிதாகக் கவலைப்பட வேண்டாம், தானாகச் சரியாகிவிடும் என்று சொன்னார் மருத்துவர். குடும்ப பின்னணியில் டயாபட்டீஸ் இல்லாதபோதும் சிலருக்கு இப்படி கர்ப்ப காலத்தில் அந்த பாதிப்பு வர என்ன காரணம்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். நித்யா ராமச்சந்திரன் கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற நீரிழிவை 'ஜெஸ்டேஷனல் டயாபட்டீஸ்' (gestational diabetes ) என்கிறோம். வழக்கமாக இது கர்ப்பத்தின் 5 அல்லது 6-வது மாதங்களில் வரும். கர்ப்பகால நீரிழிவுக்கு முக்கிய காரணமே, கர்ப்பத்தின் போது அந்தப் பெண்ணின் உடல் எடை அளவுக்கதிகமாக அதிகரிப்பதுதான். உயரத்துக்கேற்ற எடை இருக்கிறதா என்பதைக் கணக்கிடும் பி.எம்.ஐ (BMI) அளவு சராசரியை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்தக் கர்ப்பிணிக்கு நீரிழிவு வரும் வாய்ப்புகள் அதிகம். Doctor Vikat...