Skip to main content

Doctor Vikatan: நோய் எதிர்ப்புக்காக எடுத்துக்கொள்ளும் மிளகு, பூண்டும் வயிற்றைப் புண்ணாக்குமா?

Doctor Vikatan: உணவில் இயல்பிலேயே உணவில் மிளகு, பூண்டு, கிராம்பு போன்றவற்றைச் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் என்று சொல்வார்கள். அதனால் எங்கள் வீட்டில் இவற்றை தினமும் மூன்று வேளை சமையலிலும் தவறாமல் பயன்படுத்துகிறோம். தவிர, பனிக்காலம் என்பதால் முன்னெச்சரிக்கையாக  நிலவேம்புக் குடிநீர்  எடுத்துக்கொள்கிறோம்.  இதனால்  வயிற்றெரிச்சலும் தொண்டை எரிச்சலும் அதிகரித்திருக்கிறது.   நோய் பரவும் காலத்தில் இவற்றை எடுத்துக்கொள்வது சரிதானே... வயிற்றெரிச்சல் பிரச்னைக்கு என்ன தீர்வு?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

அம்பிகா சேகர்

 நோய் எதிர்ப்பு சக்திக்காக எடுத்துக்கொள்ளும் பல உணவுகளும் உணவுக்குழாய் பாதையை பாதிக்கின்றன.  நோயைத் தடுத்துவிடும் என்ற  எண்ணத்தில் இப்படிப்பட்ட இயற்கை மருத்துவ முறைகளை பலரும் அளவுக்கு மீறிப் பின்பற்றுகிறார்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைத்தான் இங்கே நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. 

மிளகும் பூண்டும்  நிலவேம்புக் குடிநீரும் நல்லதுதான் என்பதற்காக அளவுக்குமீறியும் அவற்றை எடுத்துக்கொள்ளக்கூடாது. எதையுமே அளவோடு சேர்த்துக்கொள்வது சிறந்தது. நிலவேம்புக் குடிநீரை தொடர்ந்து அருந்தக்கூடாது, அவ்வப்போது இடைவெளிவிட்டுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்களும் எச்சரிக்கிறார்கள். அதைத் தெரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும். 

உணவுகளைப் பொறுத்தவரை இந்த நேரத்தில் அதிக காரம், மசாலா சேர்த்தவற்றைத் தவிர்த்துவிடுவதுதான் சிறந்தது. சமையலில் பச்சைமிளகாயைக் குறைவாக உபயோகிக்கவும். இட்லி, இடியாப்பம், பருப்பு சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்ற மைல்டான உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். காய்கறிகள் நிறைய சேர்த்துக்கொள்ளவேண்டும்.

நிலவேம்புக் குடிநீரை தொடர்ந்து அருந்தக்கூடாது, அவ்வப்போது இடைவெளிவிட்டுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அசைவம் சாப்பிடுவோர் அவற்றைத் தவிர்க்க வேண்டியதில்லை.  ஆனால், அவற்றையும் அதிக காரம், மசாலா, எண்ணெய் இல்லாதபடி பார்த்துக்கொள்ளவும்.  பழங்கள் அவசியம் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். சிலருக்கு சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவை ஏற்றுக்கொள்ளாது. அவர்கள் அவற்றைத் தவிர்த்து வாழைப்பழம்,  ஆப்பிள் சாப்பிடலாம்.

புரோபயாடிக் இருப்பதால் தினமும் 2 ஆப்பிள்கூட சாப்பிடலாம்.அதேபோல இந்த சீசனில் ஆவி பறக்ககும் வெந்நீர் குடிக்க வேண்டியதில்லை. மிதமான சூடுள்ள நீரல் போதும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்கலாம். அசைவ உணவுக்காரர்கள் முட்டையும் சைவ உணவுக்காரர்கள் தினமும் சுண்டலும் சாப்பிடுவதன் மூலம் புரோட்டீன் தேவையைப் பூர்த்தி செய்யலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...