தமிழகத்தில் நதிநீர்ப் பிரச்னை இல்லாத ஆறுகளில் முக்கியமானது, தாமிரபரணி . மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியில் பூங்குளம் என்ற இடத்தில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துகுடி மாவட்டங்கள் வழியாக புன்னக்காயல் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது. மக்கள் தாகம் தீர்க்கவும் விவசாயத் தேவைக்கும் பயன்படும் இந்த ஆறு மாசடைந்து வருவதாக புகார் உள்ளது. ஆற்றுக்குள் திருப்பப்படும் கழிவுநீர் தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாநகரின் சாக்கடை முழுவதும் கலந்துவந்ததைத் தடுத்து ஆற்றைப் பாதுகாக்கும் நோக்கில் பாதாளச் சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளாகி விட்டபோதிலும் இன்னும் மாநகரம் முழுவதும் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அதனால் மாநகரின் பெரும்பாலான கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக ஆற்றில் கலக்கும் அவலம் உள்ளது. தாமிரபரணி ஆறு நெல்லை நகருக்குள் நுழையும் இடம் முதல், நகரைக் கடக்கும் பகுதி வரையிலும் சுமார் 25 இடங்களில் கழிவுநீர் நேரடியாக ஆற்றுக்குள் கலப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதன்படி, நிமிடத்துக்கு சுமார் 10 லட்சம் லிட்டர் கழிவுநீர் ஆற்றுக்குள் ...