Skip to main content

டெல்லி; மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு... ஆளும் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவு!

டெல்லி அரசின் உயரதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றத்துக்கு ஆணையம் அமைத்து மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்திருக்கும் விவகாரத்தில், ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு டெல்லியின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல்போக்கு நீடித்து வருகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால் - ஆம் ஆத்மி

இதற்குத் தீா்வு காண உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு தொடுத்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமா்வு நிலம், காவல், பொது உத்தரவு ஆகியவை தவிர அனைத்து விவகாரங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் உரிமை உள்ளது என்று தீா்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து, உயரதிகாரிகளின் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்வதை முடிப்பதற்கு டெல்லி முதல்வா், தலைமைச் செயலா், முதன்மைச் செயலர், உள்துறை அமைச்சா் ஆகியோா் அடங்கிய 'தேசிய தலைநகா் சிவில் சர்வீஸ்' ஆணையத்தை அமைத்து, மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை அவசரச் சட்டம் பிறப்பித்தது.

டெல்லி அரசின் பணி நியமன அதிகாரத்தை குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த அவசரச் சட்டம், உச்ச நீதிமன்ற அவமதிப்பு என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியிருந்தது. இந்த நிலையில், டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவாலை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பீகார் முதல்வா் நிதிஷ் குமாா், இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசுக்கு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "இந்த விவகாரம் தொடா்பாக அனைத்து எதிர்க்கட்சித் தலைவா்களிடமும் ஆதரவு கோருவேன்.

நிதிஷ் குமார்

நடைமுறையிலுள்ள விதிகளை மாற்ற மத்திய அரசு கொண்டு வரும் இந்த சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறாது" எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸின் ஆதரவு நிலைப்பாடு அரசியல் அரங்கில் கவனம் பெற்றிருக்கிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இந்த மாத இறுதிக்குள் மாபெரும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...