Doctor Vikatan: என் வயது 58. எனக்கு கடந்த சில வாரங்களாக காது கேட்பதில் சிரமங்களை உணர்கிறேன். இது தற்காலிகமான பிரச்னையாக இருக்குமா... மீண்டும் காது கேட்குமா அல்லது நிரந்தரமான பிரச்னையாக மாறிவிடுமா... என்ன செய்வது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ். காது- மூக்கு - தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை திடீரென ஏற்படும் காதுகேளாமை பிரச்னை ஒரு காதிலோ, இரண்டு காதுகளிலுமோ உணரப்படலாம். அது ஒலியின் அளவு குறைவது அல்லது ஒலியின் தெளிவு குறைவது என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இந்தப் பிரச்னையை 'சடன் சென்சோநியூரல் ஹியரிங் லாஸ்' (Sudden sensorineural hearing loss ) என்றும் சொல்வதுண்டு. அலர்ஜி, சைனஸ் தொற்று, காதை அடைத்துக்கொண்டிருக்கும் மெழுகு என இந்தப் பிரச்னைக்கு இதெல்லாம் காரணமாக இருக்கலாம் என்ற யூகத்தில் இதை அலட்சியம் செய்தால், பிரச்னை தீவிரமாகும்போது, சிகிச்சை அளிப்பதில் சிரமமும் பலனில்லாமல் போவதும் நடக்கும். திடீர் காது கேளாமை பிரச்னைக்குள்ளாவோரில் பத்தில் ஒன்பது பேருக்கு ஒரு காதில் மட்டும் பாதிப்...