Skip to main content

Doctor Vikatan: திடீரென கேட்காமல் போன காது... மீண்டும் கேட்குமா, நிரந்தர பிரச்னையாகுமா?

Doctor Vikatan: என் வயது 58. எனக்கு கடந்த சில வாரங்களாக காது கேட்பதில் சிரமங்களை உணர்கிறேன். இது தற்காலிகமான பிரச்னையாக இருக்குமா... மீண்டும் காது கேட்குமா அல்லது நிரந்தரமான பிரச்னையாக மாறிவிடுமா... என்ன செய்வது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.

காது- மூக்கு - தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை

திடீரென ஏற்படும் காதுகேளாமை பிரச்னை ஒரு காதிலோ, இரண்டு காதுகளிலுமோ உணரப்படலாம். அது ஒலியின் அளவு குறைவது அல்லது ஒலியின் தெளிவு குறைவது என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இந்தப் பிரச்னையை 'சடன் சென்சோநியூரல் ஹியரிங் லாஸ்'   (Sudden sensorineural hearing loss ) என்றும் சொல்வதுண்டு. 

அலர்ஜி, சைனஸ் தொற்று, காதை அடைத்துக்கொண்டிருக்கும் மெழுகு என இந்தப் பிரச்னைக்கு இதெல்லாம் காரணமாக இருக்கலாம் என்ற யூகத்தில் இதை அலட்சியம் செய்தால்,  பிரச்னை தீவிரமாகும்போது, சிகிச்சை அளிப்பதில் சிரமமும் பலனில்லாமல் போவதும் நடக்கும். 

திடீர் காது கேளாமை பிரச்னைக்குள்ளாவோரில் பத்தில் ஒன்பது பேருக்கு ஒரு காதில் மட்டும் பாதிப்பு ஏற்படுகிறது.  பாதிப்புக்குள்ளாவோரில் பலரும் காலையில் தூக்கத்தில் இருந்து எழும்போது இந்தப் பிரச்னையை உணர்ந்ததாகச் சொல்கிறார்கள். இன்னும் சிலர், போன் பேசும்போது ஒரு காதில் கேட்கும் திறன் இழப்பை உணர்ந்ததாகச் சொல்கிறார்கள்.

சிலர், கேட்கும் திறனை இழப்பதற்கு முன்பாக சத்தமான, அலாரம் போன்ற ஒலியைக் கேட்டதாகச் சொல்கிறார்கள்.

இன்னும் சிலர், கேட்கும் திறனை இழப்பதற்கு முன்பாக சத்தமான, அலாரம் போன்ற ஒலியைக் கேட்டதாகச் சொல்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கும் ஒன்றிரண்டு வாரங்களில் ஓரளவுக்கோ அல்லது முழுமையாகவோ கேட்கும் திறன் திரும்ப வருகிறது.  தாமதிக்காமல் சிகிச்சை எடுப்போரில் இந்த மாற்றத்தை அதிகம் பார்க்க முடிகிறது. சளி, தொண்டைவலி போன்ற தொற்றுகள், வயது முதிர்வு, அதிக சத்தத்துக்கு உள்ளாவது, சில மருந்துகள் உட்கொள்ளுதல் போன்றவை பரவலான காரணங்கள். ஆனால், இவற்றால் வரும் காது கேளாமை பொதுவாக மெதுவாகவே வரும். 

இதற்கு முரணாக திடீரென்று வரும் காது கேளாமை, உள் காதில் உள்ள நரம்பு பகுதியில் ஏற்படும் பிரச்னையால் வரலாம்.   விபத்தில் தலையில் அடிபடுவது, ஆட்டோஇம்யூன் குறைபாடுகள் ஆகியவையும் பரவலான காரணங்களாக இருப்பது தெரிகிறது. இவை தவிர, ரத்த ஓட்டத்தில் பிரச்னைகள் இருப்பவர்கள்,  காதையும் மூளையையும் இணைக்கும் நரம்பில் கட்டி இருப்பவர்கள், நரம்பியல் பாதிப்புள்ளவர்கள், உள்காதில் பிரச்னை உள்ளவர்கள் போன்றோருக்கும் திடீர் காதுகேளாமை பாதிப்பு ஏற்படலாம்.

ஹியரிங் பரிசோதனையின் மூலம் இந்த பாதிப்பு உறுதிசெய்யப்படும். மருத்துவர் ஆடியோமெட்ரி (audiometry ) பரிசோதனையைச் செய்து பார்த்து பிரச்னையின் தீவிரத்தைக் கண்டுபிடிப்பார். அதற்கேற்ப ரத்தப் பரிசோதனை, எம்ஆர்ஐ உள்ளிட்ட வேறு சில பரிசோதனைகளையும் மருத்துவர் பரிந்துரைக்கலாம்.  பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து மாத்திரைகள், செவிப்பறையில் செலுத்தப்படும் ஊசி, ஆன்டிபயாடிக் சிகிச்சை என பல்வேறு சிகிச்சைகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...