"கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ், நேற்று முன்தினம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் சாதித்தது என்ன; விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்? இந்த மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொழிற் சங்கங்கள், சிறு மற்றும் குறுந்தொழிற் சங்கங்கள், விவசாய சங்கங்கள், மீனவர் சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார் முதல்வர். அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிச்சயமாக, படிப்படியாக, உறுதியாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்த கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், ``குறு, சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக வைக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகளை நிச்சயமாக பரிசீலிப...