பேசுபொருளாக இருப்பதே எலான் மஸ்க்கின் வேலை போலும். ட்விட்டரை வாங்கியதில் இருந்தே அடுக்கடுக்கான மாற்றங்களைச் செயல்படுத்திப் பல விமர்சனத்திற்கு உள்ளான எலான், தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புதிய தலைமை செயல் அதிகாரியை அறிமுகப்படுத்தி உள்ளார்.
`யாரு சாமி நீ’ என ஆச்சர்யத்தோடு சென்று பார்த்தவர்களுக்கு தன்னுடைய நாய் ஃப்ளோக்கியின் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.
டிப் டாப்பாக ஆடை அணிவித்து ஒரு அதிகாரியைப் போலவே புகைப்படம் எடுத்து, `ட்விட்டரின் புதிய சி.இ.ஓ… ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி அற்புதமானவர். மற்றவர்களை விடச் சிறந்தவர். அவர் நம்பர்களில் சிறந்தவர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா கூடாதா என சில நாட்களுக்கு முன்பு கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தினார். அதில் பெரும்பாலானவர்களின் பதில் `விலக வேண்டும்’ என்பதாகவே இருந்தது.
அதற்கும் செக் வைக்கும் வகையில், இந்த வேலைக்கு ஏற்ற முட்டாள் கிடைத்த பிறகு, பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.
தற்போது தன்னுடைய நாய் ஃப்ளோக்கியின் புகைப்படத்தைப் பதிவிட்டு மீண்டும் மக்களின் கவனம் ஈர்த்திருக்கிறார் எலான். இதற்கிடையில் ஃப்ளோக்கி என்கிற கிரிப்டோ கரன்ஸி (Cryptocurrency Floki) மதிப்பு சுமார் 25 அதிகரித்திருக்கிறது.
`` ட்விட்டரை வாங்கியதில் இருந்து அதை இப்படித்தான் நாய்படாத பாடுபடுத்துகிறேன் என்று எலான் மஸ்க் உணர்த்தியுள்ளதாக” நெட்டிசன்கள் விமர்சனம் செய்கின்றனர். மேலும் சிலர், ``கருத்து கணிப்பு நடத்தி ட்விட்டர் பயனர்களை இப்படி கேலி செய்துள்ளார்” என்று கூறுகின்றனர்.
Comments
Post a Comment