ஜிஎஸ்டி கவுன்சிலின் 48-வது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் 17-ம் தேதி, டெல்லியில் காணொலி மூலமாக நடைபெற்றது. அப்போது பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு, ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி பற்றி விவாதிக்க இருந்தது, ஆனால் போதிய நேரம் இல்லாததால் அந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்படாமல் முடிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 49-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
இதில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள்...
பான் மசாலா, மெல்லும் புகையிலை உள்ளிட்ட பொருட்கள் வரி ஏயப்பில் ஈடுபடுகின்றன. பான் மசாலா, குட்கா நிறுவனங்கள் வரிஏய்ப்பு செய்வதை தடுக்க முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்.
புதிய இயந்திரங்களைப் பதிவு செய்தல் குறித்து விவாதிக்க உள்ளதால், இயந்திரங்களில் இருந்து கிடைக்கும் ரிட்டன், இன்புட், கிளையரன்ஸ், இ-இன்வாய்ஸ் கட்டாயமாக்குதல், இ-வே பில் கட்டாயமாக்குதல், பாஸ்ட்டேக் பொருத்துதல், சிசிடிவி கேமிரா பொருத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம்.
தற்போதுள்ள நடைமுறையில், இந்திய ஏற்றுமதியாளர்கள் அனுப்பும் பொருட்களை கொண்டு செல்லவரும் கப்பல்களுக்கு ஐஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் சர்வதேச ஜிஎஸ்டி வரி முறையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து ஆலோசனை உள்ளது. இதன் அடிப்படையில் கப்பல்களுக்கு வரிவிதிப்பை குறைக்கவோ, அல்லது நீக்கம் செய்யவோ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டியும் விவாதத்திற்கு வரலாம்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் என்பதால் அனைவரும் ஆர்வமாக கவனித்து வருகின்றனர்.
Comments
Post a Comment