அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தொடர் பங்கு வெளியீடு (FPO) ரத்து செய்யப்பட்டு விட்ட காரணத்தினால் அந்தப் பங்கிற்கு விண்ணப்பித்த முதலீட்டாளர்களுக்கு அந்த எஃப்.பி.ஓ பணத்தை திருப்பி அளித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இந்த எஃப்.பி.ஓ வெளியீட்டுக்கு அதிக தொகையை முதலீடு செய்ய முன்வந்த அபுதாபியை தலைமையிடமாகக் கொண்ட ஐஹெச்சி (International Holding Company) அபுதாபி நிறுவனம் தாம் முதலீடு செய்ய விண்ணப்பித்த தொகை மீண்டும் தமது வங்கிக் கணக்கிற்கு திரும்ப அளிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது.
ஐஹெச்சி நிறுவனம் அமரீக (Emirates) அரசர் குடும்பத்தினரால் நடத்தப்படுகிறது, அந்த நாட்டிலுள்ள ஐந்து முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். 2019 -ம் ஆண்டு வரை 130 மில்லியன் டாலர் அளவிற்கு சொத்துகளை வைத்திருந்த இந்த நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளில் 20 மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது. தற்போது அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 872 பில்லியன் அமரீக திர்காம் ஆக உள்ளது. இது அமரீக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
விவசாயம், ஹெல்த் கேர், ரியல் எஸ்டேட், நிதி சேவைகள் போன்ற பல்வேறு பிரிவுகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் முதல் முறையாக சென்ற ஆண்டு இரண்டு பில்லியன் டாலர் அளவிற்கு அதானி குழுமத்தில் முதலீடு செய்தது. அதானி குழுமத்தை சார்ந்த அதானி கிரீன், அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி என்டர்பிரைசஸ் ஆகிய மூன்று நிறுவனங்களில் அந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஒரு ஆண்டில் அதானி நிறுவன பங்குகள் பத்து மடங்கிற்கு மேல் லாபம் அளித்துள்ளதால் அந்த நிறுவனம் மிகப் பெரிய லாபத்தை தனது முதல் முதலீட்டில் அடைந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக அதானி என்டர்ப்ரைசஸ் எஃப்.பி.ஓ வெளியீடு மூலம் பங்குகளை விற்பனை செய்ய முன்வந்த போது மிக அதிக அளவில் 400 மில்லியன் டாலர் அளவிற்கு பங்குகள் வேண்டி விண்ணப்பித்தது. 20,000 கோடி ரூபாய் வேண்டி திரட்டப்பட்ட மூலதனத்தில் இந்த நிறுவனம் மட்டும் 16% பங்குகளுக்கு விண்ணப்பித்திருந்தது. அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் தொடர் பங்கு வெளியிட்டுக்கு மிக அதிக தொகையை முதலீடு செய்த முன்வந்த நிறுவனமாக ஐஹெச்சி திகழ்கிறது.
ஹிண்டர்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை காரணமாக தொடர் பங்கு வெளியீடு தோல்வி அடையும் என்ற பயத்திற்கு மத்தியிலும் ஐஹெச்சி நிறுவனம் தனது முதலீட்டு முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. பெருமுதலீட்டாளர்கள் பிரிவில் மீண்டும் அதிக தொகை முதலீடு செய்ய இருப்பதாக கூறி அனைவரையும் வியக்க வைத்தது.
இது பற்றி முன்பு கருத்து தெரிவித்த அந்த நிறுவனம் தமக்கு அதானி நிறுவனங்களின் மீது மிகுந்த நம்பிக்கை இருப்பதாகவும், அதானி நிறுவனங்களின் நிதி நிலைமை மிகவும் வலிமையான நிலையில் இருப்பதால் மேலும் முதலீடு செய்ய முன் வந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஐஹெச்சி மட்டுமன்றி இந்திய பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி), சுனில் மெட்டல் (Airtel), சஜன் ஜிந்தல் (JSW Energy) போன்ற நமது நாட்டின் பெரும் பணக்காரர்களும் இந்த நிறுவனத்தின் தொடர் பங்கு வெளியீட்டிருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். என்றாலும் அந்த நிறுவனத்தின் மறுபங்கு மூலதன ஆய்வு ரத்து செய்யப்பட்டதால் அனைவருக்கும் பணம் திரும்ப அளிக்கப்பட்டது.
Comments
Post a Comment