Skip to main content

``தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்காக இதைச் செய்வோம்” - மதுரையில் முதல்வர் உறுதி!

"கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ்,  நேற்று முன்தினம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்  நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மு.க.ஸ்டாலின்

இந்த மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொழிற் சங்கங்கள், சிறு மற்றும் குறுந்தொழிற் சங்கங்கள், விவசாய சங்கங்கள், மீனவர் சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார் முதல்வர். அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை  நிச்சயமாக, படிப்படியாக, உறுதியாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இந்த கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், ``குறு, சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக வைக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகளை நிச்சயமாக பரிசீலிப்போம். தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு சில மாதங்களுக்கு முன் அதற்கான தனி ஆலோசனைக் கூட்டத்தைக்கூட மதுரையில் நடத்தினோம். அப்படி நடத்தியதற்குப் பிறகு அதன் தொடர்ச்சியாக பல மேல் நடவடிக்கைகளெல்லாம் எடுக்கப்பட்டிருக்கிறது.

மதுரையில் நடந்த ஆய்வுக் கூட்டம்

அதேபோல, இந்தப்பகுதி விவசாயிகள் சார்பாக தெரிவித்த சில முக்கிய கருத்துகளையும் கவனமுடன் கேட்டு குறித்துவைத்துள்ளோம். அவற்றின் மீது உரிய நடவடிக்கை நிச்சயமாக எடுப்போம். அதேபோல விவசாயிகள் தங்களுடைய பிரச்சனைகள் பற்றி சொன்னீர்கள், உங்கள் வருமானத்தை பெருக்க வேண்டும். விவசாயிகளுடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் ஒரு தனி கொள்கையை நாம் வகுத்திருக்கிறோம்.

தேர்தல் நேரத்திலேயே ஒரு வாக்குறுதி தந்தோம், திமுக ஆட்சிக்கு வந்தவுடனே விவசாயிகளுக்கான தனி பட்ஜெட்டை தயாரித்து வெளியிடுவோம், சட்டமன்றத்தில் தாக்கல் செய்வோம் என்று சொன்னோம். சொன்ன அந்த அடிப்படையில், சட்டமன்றத்தில் தொடர்ந்து தாக்கல் செய்துவருகிறோம். இப்போதும், வருகிற 20-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டு, அடுத்ததாக வேளாண்மைத் துறை பட்ஜெட்டைத் தான் தாக்கல் செய்யப் போகிறோம். வெறும் பட்ஜெட்டை மட்டும் தாக்கல் செய்துவிட்டு போய்விட மாட்டோம்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறபோது, ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்ட வணிகர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள், அனைத்து துறைகளைச் சார்ந்திருக்கின்ற அதிகாரிகளையெல்லாம் அழைத்துப் பேசி, என்னென்ன திட்டங்களை நிறைவேற்றலாம், எதற்கு வரிவிலக்கு அளிக்கலாம், எதற்கெல்லாம் வரிகள் விதிக்கலாம் என்பதையெல்லாம் பற்றி கருத்துக்களைக் கேட்டு, அவர்களுடைய அறிவுரைகளையும் கேட்டு, அந்த அடிப்படையில்தான் பட்ஜெட்டையே தாக்கல் செய்வார். மீண்டும் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அந்தப் பணியை தொடர்ந்து செய்ய ஆரம்பித்திருக்கிறோம்.

மதுரையில் நடந்த ஆய்வுக் கூட்டம்

இப்போது விவாசாயிகளுக்கான தனி பட்ஜெட்டை தயாரிக்கும்போது கூட, அந்தத் துறையின் அமைச்சர், அந்தத் துறையின் அதிகாரிகள், மண்டலம் வாரியாகச் சென்று விவசாய சங்க பிரதிநிதிகளையெல்லாம் அழைத்து, கலந்துபேசி அவர்களுடைய கருத்துக்களை கேட்டுத்தான் வேளாண்மைத் துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. எனவே, இப்போது நீங்கள் வைத்திருக்கக்கூடிய கோரிக்கைகளையும் நிச்சயமாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேனி மாவட்ட தோட்டக்கலை பயிர் விவசாயிகள் முக்கியமான கருத்துக்களை, கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறீர்கள். அதையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்போம். ராமநாதபுரம் மாவட்ட பகுதியைச் சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்த கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும்.

இங்கு வந்துள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு சங்கங்களை சார்ந்திருக்கக்கூடிய பிரதிநிதிகளாகிய நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து தெரிவித்து, அதற்கான தீர்வுகளையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். உங்கள் கருத்துக்களையெல்லாம் நாங்கள் குறித்து வைத்திருக்கிறோம்.. நிச்சயமாக, உறுதியாக சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுடன் நாங்கள் கலந்துபேசி, உங்கள் மாவட்ட நிர்வாகம் மூலமாக படிப்படியாக அவற்றை நிறைவேற்றித் தருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...