ராஜீவ் காந்தி 32-வது நினைவு தினம்; காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியிலுள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
`சென்னையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை...' - வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை தற்போது மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
Comments
Post a Comment