Skip to main content

``கள்ளச்சாராய விவகாரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அமைதி காப்பது ஏன்?!” - சாடும் புதுச்சேரி அதிமுக

புதுச்சேரி  அதிமுகவின் மாநில கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் நேற்று (17-05-2023) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்ததிலிருந்து தமிழகத்தில் உள்ள டாஸ்மாக்கில் விற்பனை செய்யும் போலி மதுபானங்களை தயாரிக்க, தமிழகத்தின் வழியாக புதுச்சேரி மாநிலத்திற்கு எரி சாராயம் கொண்டுவரப்படுகிறது. அதன்மூலம் போலி மதுபான பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு, புதுச்சேரியில் உள்ள தி.மு.க துணையோடு பல திமுக உறுப்பினர்கள் தமிழகத்திற்கு போலி மதுபானம் கடத்தல்  தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை அ.தி.மு.க சார்பில் தொடர் குற்றச்சாட்டை கூறி வருகிறோம்.

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்

புதுச்சேரி கலால் துறை மூலம் ஒரு சில வழக்குகள் பதியப்பட்டாலும், இது போன்ற தவறுகளை செய்பவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் யார்? அதன் உரிமையாளர்கள் யார்? என்பது குறித்து உரிய விசாரணை நடத்தாமல் கூலி தொழிலாளிகள் மீது வழக்கு பதிவு செய்வது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. அதேபோல புதுச்சேரி தி.மு.க எம்.எல்.ஏ சிவாவின் தொகுதியான வில்லியனூர் தட்டாஞ்சாவடியில் மதுபான தொழிற்சாலை அமைக்கப்பட்டதாக பலமுறை அ.தி.மு.க சார்பில் கூறியிருந்தோம். அதேபோல் காரைக்காலில் இருந்தும் தி.மு.க பிரமுகரின் தலைமையின் கீழ் மதுபானம் மற்றும் போலி சாராயம் கடலூர், நாகப்பட்டினம், சிதம்பரம், சீ்ர்காழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படுவதாக கூறியிருக்கிறோம்.

புதுச்சேரி கலால் துறையின் துணை ஆணையரின் கையெழுத்தை போலியாக வைத்து, கர்நாடகத்திலிருந்து போலி பெர்மிட் மூலம் மதுபான ஆர்.எஸ் கொண்டுவரப்பட்டது என்ற குற்றச்சாட்டை நாங்கள் கூறியும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. புதுச்சேரி கலால் துறை பாராமுகமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தக்கூடிய மெத்தனால் என்ற ரசாயன எரி சாராயத்தை, புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு கடத்த அனுமதித்ததால், நான்கு நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இது சம்பந்தமாக அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

உயிர் குடித்த கள்ளச்சாராயம்

அப்போது தமிழக முதலமைச்சர், துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மஸ்தான் மற்றும் கடத்தலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்த தமிழக அமைச்சர் பொன்முடி ஆகியோர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டுமென அறிக்கை வெளியிட்டார். நாங்கள் கூறும்போதே சம்பந்தபட்டவர்கள் மீது சரியான முறையில் நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற சம்பவங்களை தடுத்திருக்கலாம். மெழுகுவர்த்தி தயாரிக்கவும், சிரஞ்ச், சானிடைசர், இருமல் மருந்து தயாரிக்க மூலப்பொருளாக இந்த மெத்தனால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மூலப்பொருட்கள் பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்ட பல தொழிற்சாலைகள் தற்போது இயக்கப்படவில்லை. ஆனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் மெத்தனால் அதிக தண்ணீர் கலந்து கள்ளச்சாராயமாக விற்பனை செய்யப்படுகிறது.

கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்கள் விவகாரத்தில் புதுச்சேரியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தி.மு.கவைச் சேர்ந்த ஏழுமலை என்பவர்  வில்லியனூர் தொகுதியில் தட்டாஞ்சாவடி கிளை செயலாளராக உள்ளார். இவர் தி.மு.க எம்.எல்.ஏவும், தி.மு.க மாநில அமைப்பாளருமான சிவாவுக்கு நெருக்கமானவர். இது போன்ற குற்றச்செயலில் அதிகம் ஈடுபட்டு வருபவர்கள் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த தி.மு.கவினர்தான்.

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள தி.மு.கவினர் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு கூட்டு வைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 22 பேர் இந்த கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தனர். ஆனால் இது தொடர்பாக கம்யூனிஸ்ட், காங்கிரஸ், வி.சி.கவினர் ஆர்ப்பாட்டமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதே அ.தி.மு.க ஆட்சியில் நடந்திருந்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள். புதுச்சேரி மாநிலத்தில் கள்ளுக்கடை, சாராயக்கடைகளை முற்றிலுமாக மூடிவிடலாம். அவற்றால் அரசுக்கு எந்த வருமானமும் கிடையாது. அதற்கு பதிலாக மதுபான கடைக்கு அனுமதி கொடுத்து விடலாம்” என்றார்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...