Skip to main content

Doctor Vikatan: அறுவை சிகிச்சைக்குப்  பிறகான வலி... பக்கவாதத்தை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: என் நண்பருக்கு அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்து வரும் நிலையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பேச்சு வராமல் மயங்கி விழுந்தார். மருத்துவர்கள் இது 'பெயின் ஸ்ட்ரோக்' என்றும், அரிதினும் அரிதாக சிலருக்கு இப்படி வரும் என்றும் சொன்னார்கள்.  இதை எப்படிப் புரிந்துகொள்வது... இதற்கு என்ன தீர்வு?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

ஸ்பூர்த்தி அருண்

``மருத்துவ ரீதியாக இது உண்மையான பக்கவாதம் (True Stroke) அல்ல. உடலில் ஏற்படும் அதீத வலி அல்லது அதிர்ச்சியின் காரணமாக, மூளைக்குச் செல்லும் தற்காலிகச் சமிக்ஞைகளில் ஏற்படும் மாற்றத்தால் பக்கவாதம் போன்ற அறிகுறிகள் தோன்றுவதையே இப்படிச் சொல்கிறார்கள்.   இந்த அறிகுறிகளை 'ஸ்ட்ரோக் மிமிக்கர்ஸ்' என்று சொல்வோம்.

கடுமையான வலி (Intense pain) சில நேரங்களில் குமட்டல், வாந்தி அல்லது மயக்க நிலையைக்கூட ஏற்படுத்தலாம். சிலருக்கு பக்கவாதம் போன்ற அறிகுறிகள் (Stroke-like symptoms) கூடத் தோன்றலாம்.   வலி கொஞ்சம் குறைந்தவுடன் இந்த அறிகுறிகள் சரியாகிவிடும். எனவே, இது உண்மையான பக்கவாதம் (True stroke) கிடையாது.

உதாரணத்திற்கு, மிகக் கடுமையான தலைவலி அல்லது மைக்ரேன் (Migraine) பாதிப்பு இருக்கும்போது கூட, பக்கவாதம் போன்ற அறிகுறிகள் வரலாம். அவர்களுக்குக் கை, கால்களில் மரத்துப்போதல் (Numbness), பலவீனம் அல்லது திடீரென பார்வை மங்குதல் (Vision loss) போன்றவை ஏற்படலாம்.

கை, கால்களில் மரத்துப்போதல் (Numbness), பலவீனம் அல்லது திடீரென பார்வை மங்குதல் (Vision loss) போன்றவை ஏற்படலாம்.

இவை அனைத்தும் பக்கவாதம் போலவே தோன்றும் (Stroke mimics). ஆனால், அந்த வலி சரியான பிறகு அவர்கள் குணமடைந்து விடுவார்கள். எனவே, கடுமையான வலி இத்தகைய அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும், ஆனால் இது உண்மையான பக்கவாதம் அல்ல. 

உங்கள் நண்பருக்கு ஏற்பட்டது  பக்கவாதம் இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளார்கள் என்றால், அவர்களின் ஆலோசனைப்படி முறையான ஓய்வு மற்றும் அவசியமான மருந்துகள் மூலம் இதிலிருந்து முழுமையாக மீண்டு வர முடியும்.    

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...