Skip to main content

ரிஷி சுனக் Vs லிஸ் ட்ரஸ்: இங்கிலாந்து பிரதமர் தேர்தலையொட்டி அரங்கேறிய காரசார விவாதம்!

இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றுவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, புதிய பிரதமரைத் தேர்வு செய்யும் பணியில், ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக நடத்தப்படும் தேர்தலில், இந்திய வம்சாவளியான ரிஷி சுனக், வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் உட்பட மொத்தம் 8 எம்.பி-க்கள் போட்டியிட்டனர். இதில் பல்வேறு சுற்றுகளின் முடிவில் ஒவ்வொரு எம்.பி-க்களாக வெளியேற, தொடக்கம் முதலே அதிக வாக்குகளுடன் ஆதிக்கம் செலுத்திவந்த ரிஷி சுனக் - லிஸ் டிரஸ் ஆகியோர் தற்போது இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

போரிஸ் ஜான்சன்

இதற்கிடையே தேர்தலில் வெற்றி பெற ஒருவரையொருவர் போட்டி போட்டுக்கொண்டு நிர்வாகிகளிடையே வாக்குறுதிகளை அளித்துவருகின்றனர். இருப்பினும், கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட தனியார் கருத்துக்கணிப்பில் ரிஷி சுனக், லிஸ் டிரஸ்-ஐ விட பின்னடைவைச் சந்தித்திருக்கிறார். அதாவது கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களில் 38 சதவிகித பேர் மட்டுமே ரிஷி சுனக்குக்கும், 62 சதவிகித பேர் லிஸ் டிரஸ்-கும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரிஷி சுனக்

இந்த நிலையில், ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இருவரும் நேற்று முன்தினம் இரவு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு ஆதரவு திரட்டியுள்ளனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இடையே காரசாரமான விவாதம் அரங்கேறியது.

விவாதத்தின்போது இருவருக்கும் பொதுவாகக் கேட்கப்பட்ட கேள்வியில், சீனா மீதான இங்கிலாந்து கொள்கை மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று இருவருமே பதிலளித்தனர். இருப்பினும் ரிஷி சுனக், முன்னதாக லிஸ் டிரஸ் சீனாவுக்குச் சென்றிருந்ததைச் சுட்டிக்காட்டி, சீனாவுடனான பிரிட்டனின் உறவு பொற்காலம் என்று லிஸ் டிரஸ் முன்னர் கூறியதாக அவர் மீது குற்றம் சாட்டினார்.

மேலும், சீனாவின் சைபர் தாக்குதலை சமாளிக்கவும், தொழில்நுட்ப பாதுகாப்பில் சிறந்த நடைமுறையைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய சர்வதேச கூட்டணியை நான் உருவாக்குவேன் என்று ரிஷி சுனக் கூறினார்.

அதைத்தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக, உக்ரைன் துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானியங்களைப் பாதுகாக்க இங்கிலாந்து கடற்படையிடம் அனுப்பப்படுமா என்ற கேள்வி இருவரிடமும் முன்வைக்கப்பட்டது. இதற்கு இருவருமே அனுப்பப்படாது என பதிலளிக்க, உக்ரைனுக்கு ஆதரவாகப் பொருளாதார உதவி போன்றவற்றை இங்கிலாந்து தொடர்ந்து செய்யும் என ரிஷி சுனக் கூடுதலாகப் பதிலளித்தார். தொடர்ந்து லிஸ் டிரஸ், ரஷ்யா-உக்ரைன் போரில் இங்கிலாந்து நேரடியாகத் தலையிடாது என்று கூறினார்.

ரிஷி சுனக்

அதைத்தொடர்ந்து லிஸ் டிரஸை தாக்கிப்பேசிய ரிஷி சுனக், ``40 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் நிதியில்லாத வரிக் குறைப்புகளை நீங்கள் உறுதியளித்துள்ளீர்கள். உங்களின் வரி குறைப்பு திட்டம் மில்லியன் கணக்கான மக்களைத் துயரத்தில் தள்ளும்" என்று வாதிட்டார்.

அதைத்தொடர்ந்து கருவூல அமைச்சராக ரிஷி சுனக் கொண்டுவந்த திட்டங்கள் குறித்து அவரை விமர்சித்த லிஸ் டிரஸ், ``கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரிகளை அவர் உயர்த்தியுள்ளார். அதனால் இப்போது மந்தமான நிலையை நாங்கள் எதிர்கொள்கிறோம். இதற்கான உண்மைகளும் புள்ளிவிவரங்களில் உள்ளது. மக்கள் தத்தளிக்கின்றனர் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் விரைந்து செயல்படுவேன்" என்று கூறினார்.

ரிஷி சுனக் Vs லிஸ் ட்ரஸ்

செப்டம்பர் 2-ம் தேதியோடு வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில், இவர்களின் இந்த காரசாரமான விவாதம் இப்போதே தேர்தலில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியுள்ளது. கருத்துக்கணிப்பில் என்ன வந்தாலும், செப்டம்பர் 5-ம் தேதி தான் தேர்தலில் யார் வெற்றிபெற்றார் என்பது தெரியவரும். அதுவரையில் பொறுத்திருப்போம்!


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...