Skip to main content

நடிகை வீட்டிலிருந்து மேலும் ரூ.29 கோடி பணம், தங்கம் பறிமுதல் - மே.வங்க அமைச்சருக்கு கடும் நெருக்கடி

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக அம்மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவருக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜி ஆகியோர் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்படுவதற்கு முன்பு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டின் போது அர்பிதாவின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அர்பிதா தற்போது அமலாக்கப்பிரிவின் விசாரணையில் இருக்கிறார். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு அவரின் மற்றொரு வீட்டில் சோதனையிடப்பட்டது.

இதில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த மேலும் 29 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் 10 லாரிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. அவற்றை எண்ணி முடிக்கவே பல மணி நேரம் எடுத்துக்கொண்டது. அதோடு வீட்டில் இருந்து 5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தின் மதிப்பு ரூ.4 கோடியாகும். பறிமுதல் செய்யப்பட்டுள்ள மொத்த பணம் 50 கோடியும் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டதில் நடந்த ஊழலில் கிடைத்த பணம் என்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்பணம் அனைத்தையும் அர்பிதா, தான் தொடர்புடைய கம்பெனியில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தார். இதற்காக பணத்தை ஓரிரு நாளில் வீட்டில் இருந்து அப்புறப்படுத்த திட்டமிட்டு இருந்ததாக விசாரணையில் அர்பிதா தெரிவித்தார். அதற்குள் அதிகாரிகள் ரெய்டு நடத்தி பறிமுதல் செய்துவிட்டனர். தொடர்ந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருவது அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

லாரியில் பணம் ஏற்றப்படுகிறது

இதற்கிடையே பாஜக-வை சேர்ந்த நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பாஜகவுடன் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 38 பேர் தொடர்பில் இருப்பதாக தெரிவித்திருப்பதை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.சாந்தனு சென் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மகாராஷ்டிராவில் ஏற்பட்டது போன்ற ஒரு நிலை மேற்கு வங்கத்தில் எந்நேரமும் ஏற்படலாம் என்று மிதுன் சக்ரவர்த்தி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சென் அளித்துள்ள பேட்டியில், ``மிதுன் சக்ரவர்த்தி சொல்வதை மேற்கு வங்கத்தில் யாரும் நம்ப மாட்டார்கள். மிதுன் சக்ரவர்த்தி மருத்துவமனையில் இருப்பதாக கேள்விப்பட்டேன். அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது” என்று தெரிவித்தார்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...