Skip to main content

CSKvMI: வெயிலோடு உறவாடிய மும்பை; தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்; பயிற்சியில் என்ன நடந்தது?

ஐ.பி.எல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக நேற்று மாலை இரண்டு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் பயிற்சி செஷனில் என்னெவெல்லாம் நடந்தது?
Ishan Kishan

முன்னதாக மும்பை அணிக்கான பயிற்சி செஷன் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் பயிற்சி செஷனுக்கு முன்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு மும்பை அணியின் சார்பில் இஷான் கிஷன் வந்திருந்தார். சென்னை பிட்ச் பற்றியும் அடுத்தடுத்து தாங்கள் செய்த 200+ சேஸ் பற்றியும் சில நிமிடங்கள் பத்திரிகையாளர்களிடம் உரையாடிவிட்டு இஷான் கிஷன் பயிற்சிக்குக் கிளம்பினார்.

வழக்கமாக சேப்பாக்கத்திற்கு வரும் அணிகள் எப்போதுமே ஐந்து அல்லது ஐந்தறை மணிக்கு மேல்தான் பயிற்சியையே ஆரம்பிப்பார்கள். ஆனால், மும்பை அணி 4 மணிக்கு முன்னதாகவே பயிற்சியைத் தொடங்கியதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா என விசாரித்தோம். அப்போது இது சார்ந்து சில தகவல்களும் அணியின் தரப்பிலிருந்து கிடைத்தன.

"போட்டி மூன்றரை மணிக்கு தொடங்குவதால் சென்னையின் வெயிலை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எங்கள் அணியில் சில வீரர்கள் வெயிலுக்குப் பழக்கப்படாதவர்களாக இருக்கின்றனர்.

Tim David
குறிப்பாக, வெளிநாட்டு வீரர்கள் வான்கடேவில் மாலை நேரத்தில் நடந்த கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியிலேயே கொஞ்சம் திணறிவிட்டார்கள். அதன் காரணமாகவே இந்த சென்னை வெயிலுக்கு கொஞ்சம் பழக்கப்பட வேண்டிதான் வீரர்களை கொஞ்சம் சீக்கிரமாகவே பயிற்சிக்கு அழைத்து வந்தோம்" என்றனர்.

மெயின் கிரவுண்ட்டுக்கு அருகே உள்ள MAC B கிரவுண்ட்டில் அர்ஜுன் டெண்டுல்கர் தீவிரமாகப் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இவரைத் தவிர மிக முக்கியமாக வெகு சமீபத்தில் மும்பை அணியில் இணைந்த கிறிஸ் ஜோர்டனும் இங்கேதான் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டு இஷன் கிஷனும் நேராக இங்கேதான் வந்து பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

Arjun Tendulkar

உள்ளே மெயின் கிரவுண்ட்டில் முக்கியமான வீரர்கள் பலரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். தோனியும் ரோஹித்தும் அருகருகே வலைபயிற்சியில் ஈடுபட்டிருந்த வீடியோவை சென்னை அணியே டிவிட்டரில் பகிர்ந்திருந்ததைப் பார்த்திருப்போம். தோனி வழக்கம் போல ஏறக்குறைய முக்கால் மணி நேரத்திற்கும் அதிகமாகவே பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். தோனியுடன் ஒரே நெட்டில் சிவம் துபேவும் அம்பத்தி ராயுடுவும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

சேப்பாக்கத்தில் நடந்த பஞ்சாபுக்கு எதிரான கடந்த போட்டியின் கடைசி பந்தில் தோனி ஒரு மிரட்டலான சிக்சரை அடித்திருந்தார். அதற்கு முந்தைய நாள் அதேமாதிரியான 'No look' வகை சிக்ஸர்களை தோனி அதிகம் பயிற்சி செய்திருந்தார். இன்றும் அதே மாதிரியான சிக்ஸர்களை அடிக்க அதிகம் பயிற்சி செய்து கொண்டிருந்தார். இதுபோக வழக்கமான அந்த லாங் ஆன், மிட் விக்கெட் சிக்சர்களையும் அடிக்கத் தவறவில்லை.

Dhoni
இடையில் ஒன்றிரண்டு முறை வின்டேஜ் தோனியாக மாறி ஹெலிகாப்டர் ஷாட்களையும் ஆடினார். ஆக, மும்பைக்கு எதிராக தோனியிடமிருந்து ஹெலிகாப்டர் ஷாட்களையும் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

இதைத் தாண்டி கடந்த சேப்பாக் போட்டிக்கான பயிற்சியிலேயே தோனி ஸ்கூப் ஷாட்டையெல்லாம் ஆட முயற்சி செய்திருந்தார். கடந்த போட்டியில் அந்த ஷாட்டை அவர் ஆடவில்லை. ஆனால், வருகிற போட்டிகளில் தோனியிடம் நாம் இதுவரை பார்க்காத ஸ்கூப், ரேம்ப் ஷாட்களையும் கூட பார்க்கக்கூடும் என்றே தோன்றுகிறது.

தோனியும் ரோஹித்தும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, தோழர்களான பொல்லார்டும் பிராவோவும் நீண்ட நேரம் நின்றுகொண்டே ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

தோனி தனது பயிற்சியை முடித்துக் கொண்ட பிறகு, ரஹானே, ஜடேஜா போன்றோர் தங்களின் பயிற்சியைத் தொடங்கினர்.

மும்பை அணியினர் திட்டமிட்டப்படி சரியாக 7 மணிக்குள் பயிற்சியை முடித்துக் கொண்டனர். சென்னை அணியின் பயிற்சி செஷன் 9 மணி வரை திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சென்னை அணியால் முழுமையாக பயிற்சியில் ஈடுபட முடியவில்லை.

Chepauk
7:15 மணிக்கே கொஞ்சம் ஈரப்பதமிக்க காற்றுவீசி லேசாக சாரல் தூறுவதைப் போன்ற சூழல் ஏற்படவே முன்னெச்சரிக்கையாக பிட்ச்சைப் பாதுகாக்கும் பொருட்டு மைதான ஊழியர்கள் கவரை விரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், சென்னை அணியும் அத்தோடு பயிற்சியை முடித்துக் கொண்டது.

இன்று மாலை போட்டி நடைபெறும் சமயத்தில் இப்படி எதுவும் கவர் விரிக்கப்பட்டு விடக்கூடாது என்பதே ரசிகர்களின் வேண்டுதலாக இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்!


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...