சேப்பாக்கத்தில் நடைபெற்ற குவாலிபயரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறது.
போட்டியில் வென்ற பிறகு பரிசளிப்பு நிகழ்வில் ஹர்ஷா போக்லேவுடன் பேசிய தோனி, போட்டியில் வென்றது குறித்தும் தனது ஓய்வு குறித்தும் பேசியிருக்கிறார்.
'இது மற்றுமொரு இறுதிப்போட்டி என அத்தனை எளிதாக கூறிவிட மாட்டேன். நாங்கள் இதற்காக 2 மாதங்களாக கடினமாக உழைத்திருக்கிறோம். ஏற்ற சூழல் வாய்க்கும் பட்சத்தில் ஜடேஜாவின் பந்துகளை எதிர்கொள்வது கடும் சிரமமாக இருக்கும். அவரது பந்துவீச்சுதான் இன்று ஆட்டத்தையே மாற்றியது.
உங்களின் பந்துவீச்சின் செறிவைத் தொடர்ந்து தேடுங்கள் என்பதையே இளம் பந்துவீச்சாளர்களுக்கு அறிவுரையாகக் கூறுகிறோம். ஃபீல்டிங்கை செட் செய்யும் விதத்தில் நான் கொஞ்சம் எரிச்சலூட்டக்கூடிய கேப்டனாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன். ஆனால், என் உள்ளுணர்வு சொல்வதைக் கேட்டு நான் அதைச் செய்கிறேன். என் மீது ஒரு கண்ணை தொடர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள் என்பதே ஃபீல்டர்களுக்கு நான் கூறியிருக்கும் செய்தி.
ஹர்ஷா போக்லே `இதுதான் சேப்பாக்கத்தில் உங்களின் கடைசி போட்டியா? ரசிகர்கள் நீங்கள் மீண்டும் சென்னையில் விளையாடுவதைப் பார்க்க முடியுமா எனக் கேட்க புன்னகைத்தபடியே தோனி, எனக்கு முடிவெடுக்க 8-9 மாதங்கள் உள்ளன. இப்போது ஏன் அதைப் பற்றி யோசிக்க வேண்டும். வரும் டிசம்பரில் மினி ஏலம் வேறு நடக்க உள்ளது. விளையாடுவேனா அல்லது வேறு ஏதாவது பொறுப்பிலா என்பது தெரியவில்லை. ஆனால், நான் எப்போதும் சி.எஸ்.கே அணியின் அங்கமாகவே இருப்பேன்.
Comments
Post a Comment