அமெரிக்காவில் நவம்பர் மாதம், அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி, பல அரசியல் நிகழ்வுகள் அரங்கேறிவருகிறது. ஆரம்பத்தில் டொனால்ட் ட்ரம்ப்பை ஜோ பைடன் எதிர்கொள்வார் என்ற நிலை மாறி, ஜோ பைடனே, துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக அங்கீகரித்தார். அவரது கட்சியும் முழு ஆதரவளித்து கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக அறிவித்து, அதற்கான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ் தேர்தலைச் சந்திப்பதற்கான தேர்தல் நிதியும் பெருமளவு திரண்டிருப்பது அவருக்கான ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறது. ஜோ பைடன் தேர்தல் வேட்பாளாராக இருந்தவரை, டொனால்ட் ட்ரம்ப்புக்கு இருந்த மக்களின் ஆதரவு நிலைப்பாடு தற்போது சரியத்தொடங்கியிருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) கருத்துக்கணிப்பின் முடிவில், மக்கள் ஆதரவில் கமலா ஹாரிஸ் 49 சதவிகிதமும், டொனால்ட் ட்ரம்ப் 47 சதவிகிதமாகவும் பதிவாகியிருக்கிறது. நியூயார்க் டைம்ஸ்/சியானா கல்லூரி (New York Times/Siena College) நடத்திய கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் 48 சதவிகிதமும், ட்ரம்ப் 47 சதவிகிதமும் முன் பின்னாக இருக்கின்றனர்.டொனால்ட் ட்ரம்ப்
நியூயார்க் டைம்ஸ் (New York Times) கருத்துக்கணிப்பு முடிவில், ஜோ பைடன் கறுப்பின வாக்காளர்களின் 59 சதவிகித வாக்குகளை மட்டுமே பெறுவார் எனத் தெரிவித்திருந்தது. தற்போது அதிபர் வேட்பாளர் மாற்றத்துக்குப் பிறகு, கமலா ஹாரிஸ் 69 சதவிகித வாக்குகளை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுகளின் அடிப்படையில், அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப்பின் வாக்கு சதவிகிதம் சரிவை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் தேர்தல் களம் நொடிக்கு நொடிக்கு மாறும் என்பதால், பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!US Elections: டொனால்டு ட்ரம்ப், கமலா ஹாரிஸ்... இந்தியாவுடனான அணுகுமுறை எப்படி?!
http://dlvr.it/TB9RQB

Comments
Post a Comment