Skip to main content

Doctor Vikatan: எலுமிச்சை, தக்காளி, மஞ்சள்... சமையல் பொருள்களை  சருமத்தில் apply பண்ணலாமா..?

Doctor Vikatan: என் தோழி தினமும் சமைக்கும்போது, சமையலுக்குப் பயன்படுத்தும் பொருள்களில் எதையாவது எடுத்து முகத்தில் தடவிக்கொள்வாள். உருளைக்கிழங்கு சாறு, எலுமிச்சை சாறு, தயிர், புதினா சாறு... இப்படி எதையும் விட்டுவைக்க மாட்டாள். எல்லாமே சரும ஆரோக்கியத்துக்கு உதவும் என்பது அவள் கருத்து. இந்த விஷயம் எந்த அளவுக்குச் சரியானது... சமையலுக்கான அனைத்துப் பொருள்களையும் நேரடியாக சருமத்திலும் apply செய்யலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா  

சருமநல மருத்துவர் பூர்ணிமா

சமையலுக்கான பொருள்களை முகத்தில் தடவிக்கொள்வது பற்றி கேட்கிறீர்கள். சிறுநீரை முகத்தில் தடவினால், சருமத்தின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும் என்றொரு நம்பிக்கை பரவிக்கொண்டிருக்கிறது. அதை நம்பி, பலரும் தங்களது சிறுநீரையே முகத்தில் தடவிக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட விநோதங்களும் இங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

யூரியா என்பது  நீர்ச்சத்துக்கு காரணமானது. குறிப்பிட்ட சதவிகிதம் யூரியா உள்ள கான்சென்ட்ரேஷன், நம் சருமத்தின் ஈரப்பதம் குறையாமல், அதைத் தக்கவைக்கும். அதையும் இதையும் பொருத்திப் பார்த்து, தங்களது சிறுநீரையே மாய்ஸ்ச்சரைசராக உபயோகிக்கும் கூட்டம் ஒன்று இருக்கிறது.  எல்லா பொருள்களும் நம் சருமத்துக்குப் பொருத்தமானவை என்று சொல்ல முடியாது. இப்படி ஒவ்வாத பொருள்களால் ஏற்படும் அலர்ஜியை  சரும மருத்துவத்தில், 'அலர்ஜிக் கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்' (Allergic contact dermatitis) என்று சொல்வோம்.  எலுமிச்சைப்பழம், புளி, கிராம்பு போன்றவற்றில் இயல்பிலேயே ஒவ்வாமையை ஏற்படுத்தும் தன்மை இருக்கும். எனவே, இப்படி உள்ளுக்குச் சாப்பிடுகிற எல்லாவற்றையும் சருமத்தில் அப்ளை செய்வது ஆரோக்கியமான விஷயமல்ல. 

facepack

சருமத்தின் அழகையும் இளமையையும் தக்கவைக்க வேண்டுமானால், நிறைய காய்கறிகள், பழங்களை உள்ளுக்குச் சாப்பிடுங்கள். அவற்றையெல்லாம் சருமத்துக்குப் பயன்படுத்தி, சிக்கலை வரவழைத்துக் கொள்ளாதீர்கள். சருமப் பராமரிப்பு என்ற விஷயத்தை எளிதாக வைத்துக்கொள்ளுங்கள். உள்ளே சாப்பிடும் காய்கறி, பழங்களில் ஒன்றிரண்டு வேண்டுமானால் பிரச்னையை ஏற்படுத்தாமல் இருக்கலாம். அவையும் உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று அர்த்தமில்லை. சருமத்தில் அப்ளை செய்தாலும் பாதிப்பை ஏற்படுத்தாதவை என்று புரிந்துகொள்ளுங்கள். அந்த வகையில் தயிர், தேன், ஓட்ஸ் போன்றவற்றை சருமத்தில் தடவிக்கொள்வதால் பிரச்னைகள் வராது. 

ஒரு ஃபேஸ்பேக்கோ, ஆயில் மசாஜோ செய்துகொண்டு காத்திருக்கும் அரைமணி நேரமோ, ஒரு மணி நேரமோ உங்களுக்கு ஒருவித ரிலாக்ஸிங் மனநிலையைத் தரும்பட்சத்தில் அவற்றைச் செய்து கொள்ளலாம். அந்த நல்ல உணர்வுக்காக இப்படிப்பட்ட வீட்டு சிகிச்சைகளை வாரம் ஒருமுறையோ, பத்து நாள்களுக்கு ஒருமுறையோ செய்து கொள்ளலாம். மற்றபடி அவை பலன் தரும் என்று நம்பாதீர்கள். அப்படி உங்கள் மனநிலைக்காக நீங்கள் தேர்வுசெய்கிற பொருள்களும் பாதுகாப்பானவையாக  இருக்கட்டும். எலுமிச்சை, புதினா என கிடைக்கும் எல்லாவற்றையும் சருமத்தில் தடவாதீர்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...