Skip to main content

`5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு' - மத்திய அமைச்சர் `அதிர்ச்சி' தகவல்!

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் உயிரிழப்பு, கொலை போன்ற செய்திகள் அவ்வப்போது தொடர்ச்சியாக வந்த வண்ணமே இருக்கிறது. இந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாடுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்திருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார். முன்னதாக, நாடாளுமன்றத்தில் தற்போது நடந்துகொண்டிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில், கடந்த வெள்ளியன்று மக்களவையில் கேரள எம்.பி கே.சுரேஷ், 2019 முதல் வெளிநாடுகளில் உயர் கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களின் உயிரிழப்பு பற்றி கேள்வியெழுப்பினார்.உயிரிழப்புகள்

அதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் அளித்த பதில் விவரங்களில், `41 நாடுகளில் விபத்துகள், மருத்துவ காரணங்கள் மற்றும் தாக்குதல்களால் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக கனடாவில் 172 மாணவர்களும், அமெரிக்காவில் 108 மாணவர்களும் உயிரிழந்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, இங்கிலாந்தில் 58 மாணவர்களும், ஆஸ்திரேலியாவில் 57 மாணவர்களும், ரஷ்யாவில் 37 மாணவர்களும், ஜெர்மனியில் 24 மாணவர்களும் என அதிகபட்சமாக உயிரிழந்திருக்கின்றனர். அண்டை நாடான பாகிஸ்தானில் ஒரு உயிரிழப்பு பதிவாகியிருக்கிறது.

மொத்தமாக இதில், 19 உயிரிழப்புகள் கொலைகளால் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றில், கனடாவில் 9 கொலைகளும், அமெரிக்காவில் 6 கொலைகளும், ஆஸ்திரேலியா, சீனா, இங்கிலாந்து, கிர்கிஸ்தானில் தலா ஒரு கொலையும் நடந்திருக்கிறது. இதுமட்டுமல்லாது, கடந்த மூன்று ஆண்டுகளில் 48 இந்திய மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதற்கான காரணங்கள் அமெரிக்க அதிகாரிகளால் அதிகாரபூர்வமாகப் பகிரப்படவில்லை' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங்

பின்னர், வெளிநாடுகளில் இந்திய மாணவர்களுக்கான பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்த கீர்த்திவர்தன் சிங், ``வெளிநாடுகளிலுள்ள இந்திய மாணவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது இந்திய அரசின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்று. மேலும், வெளிநாடுகளிலுள்ள இந்திய தூதரகங்கள் அங்கிருக்கும் பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களுடன் வழக்கமான தொடர்பைக் கொள்கின்றன" என்று தெரிவித்தார்.``தாமரை வியூகமும் `6' பேரும்... A1, A2 - அதானி, அம்பானி"- காட்டமான ராகுல் காந்தி | Speech Highlights


http://dlvr.it/TBD7VY

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...