Skip to main content

Posts

Showing posts from May, 2024

இஸ்ரேல் தாக்குதலை `இனப்படுகொலை' என்று கூறிய இஸ்லாமிய செவிலியர்; டிஸ்மிஸ் செய்த அமெரிக்க மருத்துவமனை!

பாலஸ்தீனத்தின் (Palestine) ஹமாஸ் (Hamas) குழு கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் (Israel) மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 250-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் குழுவினர் பணயக்கைதிகளாக கடத்திச் சென்றதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. இதற்கு எதிர் தாக்குதல் என்ற பெயரில் அக்டோபர் 8-ம் தேதி அமெரிக்காவின் நிதி மற்றும் ஆயுத உதவியுடன் பாலஸ்தீனத்தின் காஸா (Gaza) பகுதியில் போர்தொடுத்த இஸ்ரேல் இன்றுவரைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது.All Eyes On Rafah ஓயாமல் நடந்துகொண்டிருக்கும் இஸ்ரேலின் இந்த 8 மாத தாக்குதலில், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், மனிதாபிமான உதவிகளைச் செய்துவருபவர்கள் என கிட்டத்தட்ட 36,000 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 81,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். சமீபத்தில் ஐந்து நாள்களுக்கு முன்பு, பொதுமக்கள் தஞ்சமடைந்திருக்கும் பாதுகாப்பு முகாம்கள் நிறைந்த ராஃபாவில் (Rafah) தாக்குதல் நடத்தக்கூடாது என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட... இரண்டாவது நாளிலேயே அங்கு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்தத் ...

இந்தி பாடல்கள் பாடி வயல்களில் நடவு பணி... உற்சாகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள்..!

டெல்டா மாவட்டங்களில் நெல் வயலில் நாற்றுகளை பறித்து நடுவதற்கு முன் ஒரு கட்டு நாற்றை எடுத்து சாலையில் வைத்து வணங்குவது தமிழக விவசாயிகள் வழக்கம். சாலை வழியாக செல்பவர்கள் நாற்று கட்டை வணங்கி காசு போட்டுவிட்டு செல்வார்கள். இதே போல் நாற்றாங்காலில் நாற்றை பறித்து கட்டு கட்டும் ஆண்களும், நடவு பணியில் ஈடுபடும் பெண்களும் களைப்பு ஏற்படாமல் இருக்க நாட்டுப்புற பாடல்களை பாடுவார்கள். குறிப்பாக தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளை பாடலாக்கி நட்டுப்புறப் பாடலாக பாடுவார்கள். சினிமா மற்றும் நையாண்டி பாடல்களையும் பாடுவார்கள். பாடல் பாடி விவசாயப் பணியில் ஈடுப்பட்டுள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் அப்படி பாடும் விவசாய கூலித்தொழிலாளர்களின் குரல் வளம் அற்புதமாக இருக்கும். இவை தமிழக விவசாயிகள் பின்பற்றும் பழக்கவழக்கங்களில் ஒன்று. மேலும் அவர்களது வாழ்க்கையிலும் பின்னி பிணைந்துள்ளது. கடிமான வேலையை கூட ரசித்து செய்யக்கூடியவர்கள் தமிழக விவசாயிகள். இந்நிலையில் பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை தமிழகத்தில் நிலவி வருகிறது .குறிப்பாக டெல்டாவில்ஒரு புறம் நடவு தொடங்கி அறுவடை வரை அனைத்த...

Trump: 34 குற்றச்சாட்டுகளில் `குற்றவாளி' எனத் தீர்ப்பு... `தான் அப்பாவி’ எனக் குமுறும் ட்ரம்ப்!

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் அமெரிக்கத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் அதிபராக வெள்ளை மாளிகைக்குள் நுழையலாம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump), நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறார்.டொனால்ட் டிரம்ப் முன்னதாக ஸ்டோர்மி டேனியல்ஸ் (Stormy Daniels), முன்னாள் அதிபர் ட்ரம்ப் 2006-ல் தன்னுடன் உடலுறவு கொண்டதாகவும், 2016 அமெரிக்கத் தேர்தலில் அவர் போட்டியிடும்போது இதைப்பற்றி வெளியில் கூறாமலிருக்க தனக்கு 1,30,000 டாலர் கொடுத்ததாகவும் மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.ஸ்டோர்மி டேனியல்ஸ் - டொனால்ட் டிரம்ப் பின்னர், இதில் ட்ரம்ப் தனது முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலம் ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு அவர் பணம் கொடுத்திருப்பது தெரியவந்தது. அமெரிக்காவில், நடிகைக்கு அவர் பணம் கொடுத்தது சட்டப்படி தவறு இல்லை என்றாலும், தன்னுடைய தேர்தல் பிரசாரத்துக்கு உதவும் வகையில் அந்தச் செலவை சட்ட செலவுகள் என தேர்தலில் ஆவணங்களைத் தாக்கல்செய்தது பெடரல் பிரசார நிதிச் சட்டத்தை மீறிய செயல் என்று அரசு தரப்பிலிருந்து நீத...

Doctor Vikatan: Pre-diabetes நிலையை உணவுப்பழக்கத்தின் மூலம் ரிவர்ஸ் செய்ய முடியுமா?

Doctor Vikatan: Pre- diabetes உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய உணவுகள் பற்றி தெரிவிக்கவும். Pre diabetes நிலையை உணவுப்பழக்கத்தின் மூலம் ரிவர்ஸ் செய்ய முடியுமா? puviarasu punnaghai, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் ரேச்சல் தீப்தி ரேச்சல் தீப்தி ப்ரீ டயாபடிஸ் ( Pre diabetes) எனப்படும் சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலையில், வாழ்வியல் மாற்றங்களும், உடற்பயிற்சிகளும் மிக முக்கியமாகப் பின்பற்றப்பட வேண்டும்.  வாக்கிங், ஜாகிங், யோகா, ஜிம் பயிற்சிகள் போன்று ஏதேனும் ஒரு பயிற்சியை தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் செய்ய வேண்டும். தூக்கம் முறையாக இருக்க வேண்டியது முக்கியம். இரவு 10 மணிக்குத் தூங்கச் சென்று காலை 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். ப்ரீடயாபடிஸ் நிலையில் உள்ளவர்களுக்கு போதுமான தூக்கம் இல்லாவிட்டால், அது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். ப்ரீ டயாபடிஸ் நிலையில் சிலர் அதிக உடல்பருமனுடன் இருப்பதையும் பார்க்கிறோம். சராசரி எடையில் இருப்பவர்கள் அதிகபட்ச ஸ்ட்ரெஸ்ஸுடன் வருவதையும் பார்க்கிறோம். இந்த இரண்டு...

Iron Man கைகளைப் பெறும் 5 வயது சிறுவன்... மருத்துவ உலகில் மற்றுமொரு சாதனை!

நியூயார்க்கின் லாங் ஐலேண்டை சேர்ந்த 5 வயது சிறுவன் ஜோர்டன் மரோட்டா. இந்தச் சிறுவன் பிறக்கும்போதே இடது கையின்றி பிறந்திருக்கிறார்.  இந்தநிலையில் சிறுவனுக்கு மூளையின் கட்டளைக்கு இணங்கி இயற்கையாகச் செயல்படும் வகையில் அயன் மேன் தீமில் (bionic Hero Arm) மருத்துவர்கள் கையைப் பொருத்தியுள்ளனர். இதன் மூலம் உலகில் சிறிய வயதில் `பயோனிக் ஹீரோ ஆர்ம்' பெறும் நபர் என்ற பெருமையை ஜோர்டன் பெற்றுள்ளார். Jordan - Bionic Hero Arm அறுவை சிகிச்சையில் 35 கிலோ எடை குறைத்து... சகோதரியின் கணவருக்கு கல்லீரல் தானம் செய்த பெண்! சிறுவனுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் அயர்ன் மேன் என்பதால், இந்தக் கையை அப்படியே அச்சு அசலாக அயர்ன் மேன் திரைப்படத்தில் வரும் கைகளைப் போலவே சிவப்பு மற்றும் கோல்டன் நிறத்தில் வடிவமைத்துள்ளனர். சிறுவனின் இடது கை முடியும் இடத்திலிருந்து இந்தக் கை பொருத்தப்படுகிறது. கை தசைச் சுருக்கங்களைக் கண்டறிய மின்முனைகள் மற்றும் சென்சார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எளிதாக இந்தக் கையை இணைந்து பிரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கையை `நப்பி’ என்று குடும்பத்தினர் செல்லமாக அழைக்க...

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம்... ட்ரோல் செய்த நெட்டிசன்கள்; மாணவி சொன்ன சூப்பர் மெசேஜ்!

உத்தர பிரதேச மாநிலத்தின் 10-ம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த பிராச்சி நிகத்தை (Prachi Nigam) யாராலும் மறக்க முடியாது. தனது கடின உழைப்பால் அம்மாணவி 98.5 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், அவரது முகத்தில் அதிகப்படியான முடி வளர்ந்திருப்பதற்காக கிண்டல் செய்யப்பட்டார். இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து சில வாரங்கள் கழித்து நிகம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான மெசேஜ் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் இன்ஸ்டா இன்ஃப்ளுயன்சரான அனிஷ் பகத் சீதாபூர் மஹ்முதாபாத்தில் உள்ள பிராச்சி நிகத்தின் வீட்டிற்குச் செல்கிறார். பூக்கள் கொடுத்து நிகத்திற்கு வாழ்த்து தெரிவித்தவர், `பெரும்பாலான மக்கள் அவள் எப்படி இருக்கிறாள் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினர். அவள் பாராட்டப்படுவதற்கு பதிலாக, அவள் முழு தேசத்தாலும் கொடுமைப்படுத்தப்பட்டாள். Prachi Nigam - Anish bhagatt 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம்... மாணவியின் தோற்றத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்! ஏன்! பெரும்பாலான பெண்கள் தங்களது வாழ்வில் இதனை அனுபவிக்கிறார்கள். அதனால் முழு தேசமும் பார்க்கத் தகுத...

Tug of War: இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கிடையேயான போட்டியில் வென்ற இந்திய வீரர்கள்! | Viral Video

2005 - ம் ஆண்டு சூடான் அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்திற்கும் இடையிலான விரிவான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் பிரதிபலிப்பாக, சூடானில் உள்ள ஐ.நா தூதரகம், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் பாதுகாப்பு பணியில், ஐ.நா சபையில் இருக்கும் உறுப்பு நாடுகள் தங்கள் ராணுவ வீரர்களை ஈடுபடுத்தி வருகிறது. இந்த நிலையில், சூடானில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களுக்கு மத்தியில் அவ்வப்போது நல்லிணக்க விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். #WATCH | Indian troops won a Tug of War that took place between them and Chinese troops during deployment in Sudan, Africa under a UN Peacekeeping mission: Army officials (Viral video confirmed by Indian Army officials) pic.twitter.com/EpnGKURPa3— ANI (@ANI) May 28, 2024 அதன் அடிப்படையில், இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா ராணுவம் வெற்றி பெற்றிருக்கிறது. அந்தப் போட்டி நடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த வீடியோவை ராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்...

Doctor Vikatan: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துமா நாவல் பழமும், நாவல் பழக் கொட்டைகளும்?

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகளுக்கு நாவல் பழம் நல்லது என்பது உண்மையா? எத்தனை பழங்கள் எடுத்துக்கொள்ளலாம்? நாவல் பழக் கொட்டையைப் பொடித்து தண்ணீரில் கலக்கிக் குடித்தால் சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது உண்மையா? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் பொதுவாக நீரிழிவு நோயாளிகளை எல்லாப் பழங்களையும் எடுத்துக்கொள்ள அறிவுறுத்த மாட்டோம். அவர்கள் சாப்பிட அனுமதிக்கப்படுகிற பழங்களில் முக்கியமான ஒன்று நாவல்பழம், நாவல் பழம் கிடைக்கும் சீசனில், ஒரு நாளைக்கு 3 முதல் 4 பழங்கள் வரை சாப்பிடலாம். முடிந்த அளவுக்கு அந்தக் காலத்தில் அதிகம் கிடைத்த நாட்டு நாவல் பழமாகப் பார்த்துச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. ஒருவேளை அது கிடைக்கவில்லை என்ற பட்சத்தில் தற்போது சந்தையில் கிடைக்கிற நாவல்பழத்தையும் சாப்பிடலாம்.  நாவல்பழத்தில் 'ஜம்போலின்' (Jambolin) என்ற வேதிப்பொருள் இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் உப பாதிப்புகளைத் தடுக்கும் தன்மை கொண்டது இந்த வேதிப்பொருள். பளிச்சென்ற நிறத்தில் இருக்கும் காய்கறி, பழங்கள் எல்லாவற்ற...

Smoking: டீன் ஏஜ் பெண்களின் புகைப்பழக்கம் இருமடங்கு அதிகரிப்பு... மோசமான பிரச்னைகள் வரலாம்?!

`புகைபிடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும்’… `புற்றுநோயை உருவாக்கும்’… எனக் கூறினாலும் `என் உடல், என் சுதந்திரம்’ எனப் புகைபிடிப்பவர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர்.  ஒருபுறம் இந்தியாவில் புகையிலையின் நுகர்வு குறைந்திருக்கிறது. இருந்தாலும், டீன் ஏஜ் பெண்கள் புகைபிடிப்பது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள இந்திய புகையிலை கட்டுப்பாட்டு அறிக்கையில் கூறியுள்ளது. சிகரெட் smoking ஆஸ்துமா: புகை, மூச்சிரைப்பு, இன்ஹேலர், நீச்சல் - அறிய வேண்டிய தகவல்கள்! - கன்சல்டிங் ரூம் - 2 இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில் வயதான பெண்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் குறைந்துவிட்டாலும், இளம் பருவத்தினரிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இது குறித்து அறிக்கையில் வெளியிட்டுள்ள தகவலில், 2009 மற்றும் 2019-க்கு இடையில் பதின்ம வயது பெண்களில் புகைபிடித்தல் 3.8 சதவிகித புள்ளிகள் உயர்ந்து 6.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது பெண்களில் அடுத்த தலைமுறையினர் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதைக் காட்டுகிறது. அதுவே பதின்ம வயது ஆண்...

Doctor Vikatan: மதியம் ஆரம்பித்து இரவில் உச்சம் தொடும் தலைவலி... காரணமும், தீர்வும் என்ன?

Doctor Vikatan: எனக்கு மதிய நேரத்தில் லேசாக தலைவலி ஆரம்பித்து மாலை நேரத்தில் அதிகரித்து இரவு ஒன்பது மணிக்கு உச்சத்தை அடைகிறது. வாந்தி எடுத்து  குடல் சுத்தமான  பிறகு தான் குறைகிறது. தலைவலி ஆரம்பிக்கும்போதே நான் பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்வேன். அப்படி எடுத்துக் கொண்டால் அரை மணி நேரத்தில் தலைவலி சரியாகி விடுகிறது. மாதம் ஒருமுறை இதுபோல் தலைவலி வருகிறது. இதற்கு என்ன காரணம்.. தீர்வு என்ன? -kjprakash123, விகடன் இணையத்திலிருந்து. பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மற்றும்  நோய்க்குறியியல் மருத்துவர் மோனிகா. நோய்க்குறியியல் மருத்துவர் மோனிகா தலைவலியில் பல வகைகள் உள்ளன. டீஹைட்ரேஷன் (Dehydration) எனப்படும் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டாலும் தலைவலி வரலாம். கண் பார்வையில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலும் அதன் அறிகுறியாக தலைவலி வரலாம். பவர் அதிகமானாலோ, குறைந்தாலோ, பார்வை மங்கினாலோ தலைவலிக்கலாம். பார்வையில் பிரச்னை இருப்பதை அலட்சியப்படுத்திவிட்டோ, அறியாமலோ, கண்ணாடி அணியாமல் இருப்பவர்களுக்கும் அடிக்கடி தலைவலி ஏற்படலாம். சிலருக்...

Vogue: உலகில் மிகச் சுவையாக சமைக்கும் பெண்கள் உள்ள 5 நாடுகள்... இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

ஒரு நல்ல உணவு வயிற்றை மட்டுமல்ல மனதையும் நிரப்பிவிடும். `இந்தப் பொழப்பு தான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது’ என பல உணவகங்களைத் தேடித் தேடி உண்ணும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஊர், இடம், கடையின் பெயர் என ஓர் உணவைச் சொன்னாலே அது இங்க தான் ஃபேமஸ் எனச் சொல்லும் மக்கள் இருக்கின்றனர்.  வெளியில் சாப்பிட்டாலும் வீடுகளில் செய்யப்படும் உணவுகள் தனிரகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரின் சுவைக்கு ஏற்ப பெண்கள் சமையல் செய்வதுண்டு. இந்நிலையில் பிரபல வோக் (VOGUE) இதழானது, உலகின் எந்தெந்த நாடுகளில், பெண்கள் மிகச் சுவையாகவும், அதிக வெரைட்டிகளிலும் சமைக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. அதில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.  உலகில் பெண்கள் மிகச் சுவையாகவும், அதிக வெரைட்டிகளிலும் சமைக்கும் முதல் ஐந்து நாடுகள்… *இத்தாலி: இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பது இத்தாலி. இங்குள்ள பெண்கள் பாஸ்தா மற்றும் சாஸ்களில் பல வகையான உணவுகளைத் தயாரிக்கிறார்கள்.  Kaiseki பல நோய்கள் ஒரு தீர்வு... பழைய சாதம் எனும் All In all உணவு; அரசு மருத்துவமனையில் அசத்தல் சிகிச்...

Doctor Vikatan: சருமத்தில் உள்ள Sun tan-ஐ நீக்க வீட்டு சிகிச்சை உதவுமா?

Doctor Vikatan: என் வயது 28. தினமும் ஒரு மணி நேரம் பயணம் செய்து வேலைக்குச் செல்கிறேன். சன் ஸ்கிரீன் உபயோகித்தாலுமே என் சருமம் வெயில் பட்டு, கருத்துப் போகிறது. அப்படிக் கருத்துப்போன அடையாளம் முகத்தில் திட்டுத்திட்டாக (Sun tan) கறுப்பாகப் படிந்திருக்கிறது. அதை நிரந்தரமாகப் போக்க முடியுமா.... வீட்டிலேயே ஏதேனும் சிகிச்சைகள் செய்து சருமத்தை பழைய நிறத்துக்குக் கொண்டு வர முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக். கீதா அஷோக் Doctor Vikatan: கழுத்து வலி உள்ளவர்கள் தலையணை இல்லாமல் உறங்க வேண்டுமா? Sun tan வராமலிருக்க வேண்டும் என்றால், சன் ஸ்கிரீனை தேர்வுசெய்வதிலிருந்தே அதற்கான அக்கறை தொடங்க வேண்டும். சிலர் காலையில் தடவிக்கொண்டு செல்லும் சன்ஸ்கிரீனுடனேயே மாலை வரை இருப்பார்கள். ஆனால், அது போதாது. உதாரணத்துக்கு, சன் ஸ்கிரீனில் எஸ்பிஎஃப் (SPF) 15 எனக் குறிப்பிட்டிருந்தால், அதைத் தடவியதிலிருந்து 45 நிமிடங்கள்வரைதான் பாதுகாப்பு கொடுக்கும்.  அதன் பிறகு வெயிலின் தாக்கமானது சருமத்துக்குள் ஊடுருவ ஆரம்பிக்கும். எனவே, ...

Happy Marriage: வயசு விஷயமே கிடையாது; இந்த 5 விஷயங்கள் இருந்தா போதும்... காமத்துக்கு மரியாதை - 171

புதிதாகத் திருமணமானவர்கள் மட்டுமல்ல, திருமணமாகிப் பல வருடங்களான தம்பதிகளுக்கும் அடிக்கடி வரும் சந்தேகம் இது. 'ஒருமுறை உறவுகொண்டவுடன் எவ்வளவு நேரம் கழித்து மறுமுறை உறவுகொள்ள முடியும்' என்கிற கேள்விதான் அது. இதற்கான பதிலைச் சொல்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ். ''இந்தக் கேள்விக்கான பதில் திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆகியிருக்கின்றன; தம்பதியரிடையே இருக்கிற காதல்; ஈர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பொறுத்தது. சமீபத்தில்தான் திருமணம் நடந்திருக்கிறது என்றால், ஒருமுறை உறவுகொண்ட அடுத்த ஐந்தாவது நிமிடமே மறுபடியும் உறவு வைத்துக்கொள்ள கணவன், மனைவி இருவராலுமே முடியும். மனதுக்குப் பிடித்ததைப் புதிதாகச் செய்ய ஆரம்பிக்கையில் கிடைக்கிற உற்சாகத்துக்கும் சிலிர்ப்புக்கும் அணை போட முடியாது என்பதால், புதிதாகத் திருமணமானவர்களால் ஒரே நாளில் பலமுறை உறவு வைத்துக்கொள்ள முடியும். எல்லோருடைய தேனிலவு நாள்களும் இப்படித்தான் இருக்கும். Relationship Relationship: தம்பதியர் கட்டாயம் படிக்க வேண்டிய கிரேக்க பூதம் கதை..! | காமத்துக்கு மரியாதை - 164 திருமணமாகி சில வருடங்கள் ஆகிவிட்டன என்றால், தம்பத...

கடும் நீரிழிவு நோய்; அழுகிப்போன பற்கள்... 4 வயது மகளின் இறப்புக்குக் காரணமான தாய்க்குச் சிறை!

அமெரிக்காவின் ஓஹியோ பகுதியைச் சேர்ந்த பெண், தமரா பேங்க்ஸ். இவருடைய 4 வயது மகள் 2022 ஜனவரி மாதம் உயிரிழந்தார். அவரது மருத்துவ சோதனையில், கடுமையான நீரிழிவு நோயால் அந்த குழந்தை பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் சிறுமியின் உடலைப் பிரேத பரிசோதனை செய்ததில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பல பற்கள் அவள் இறக்கும்போது அழுகியிருந்தன. எனவே, இது கொலையாக இருக்கலாம் என சந்தேகித்த மருத்துவர்கள், காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். தமரா பேங்க்ஸ் அதன் அடிப்படையில், சிறுமியின் பெற்றோர் தமரா பேங்க்ஸ் - கிறிஸ்டோபர் ஹோப் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணையில், தமரா பேங்க்ஸ் - கிறிஸ்டோபர் ஹோப் தம்பதிக்கு இருந்த ஒரு மகன் மிக மோசமாக நடத்தப்பட்டிருக்கிறார். மேலும், அவர் கண்டறியப்படாத நீரிழிவு நோயால் 4 வயதில் கோமாவில் விழுந்தார். தற்போது அவர்களின் இன்னொரு மகள் 4 வயதில் நீரிழிவு நோயால் இறந்திருக்கிறார். முறையான மருத்துவ பராமரிப்பு இல்லாததே சிறுமியின் மரணத்திற்குக் காரணம். சிறுமிக்கு 24 கிராமுக்கும் குறைவான சர்க்கரையே கொடுக்க வேண்...

Doctor Vikatan: இரண்டுங்கெட்டான் நேரத்தில் பசி, இரவில் பசியின்மை... எப்படிச் சமாளிக்கலாம்?

Doctor Vikatan: மதியம் ஒரு மணிக்கு உணவு உண்ட பிறகு நான்கு மணிக்கு பசி ஏற்படுகிறது. அந்த நேரத்தில் நொறுக்குத்தீனிகள் எதையாவது சாப்பிட்டால், இரவு நேரத்தில் பசி எடுப்பதில்லை. இடைப்பட்ட நேரத்தில்  என்ன சாப்பிடலாம்... எவ்வளவு சாப்பிடலாம்? பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஸ்ரீமதி வெங்கட்ராமன் இடைப்பட்ட நேரத்தில் பசி எடுக்கும்போது நீங்கள் பழங்கள் சாப்பிடலாம். அது ஆரோக்கியமானதாக இருக்கும். பழங்கள் சாப்பிடுவதால் உடல் எடையும் கூடாது. வயிறு நிறைந்த உணர்வையும் பெறுவீர்கள்.  ஆனால், சிலருக்கு சூடாக ஏதேனும் சாப்பிட்டால்தான் சாப்பிட்ட திருப்தியே ஏற்படும். அவர்கள், கைப்பிடி அளவு வேர்க்கடலையை வறுத்துச் சாப்பிடலாம். அது வேண்டாம் என்பவர்கள் அரிசிப் பொரியை வறுத்துவிட்டு, அதில் மஞ்சள் தூள், வேர்க்கடலை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து மொறுமொறுப்பாகச் சாப்பிடலாம். அரிசிப் பொரியில் செய்கிற மண்டகி என்ற உணவு கர்நாடகாவில்  மிகவும் பிரபலம். அரிசிப் பொரியை தண்ணீரில் நனைத்துப...

Happy Teeth: உடையும் பற்கள், வெள்ளை நிறப் புள்ளிகள்... Fluorosis பிரச்னையாக இருக்கலாம்..!

அனைத்துப் பற்களும் சீராக ஒரே நிறத்தில் இல்லாமல், அங்கங்கே கறை பிடித்தது போலவும், வெள்ளை நிறப் புள்ளிகள் இருப்பது போல பல் அமைப்பு இருப்பதைப் பார்த்திருப்போம். குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்தப் பிரச்னை பொதுவாகக் காணப்படுகிறது. இதனை மருத்துவ சொற்களில் ஃப்ளூரோசிஸ் (Fluorosis) என்கின்றனர். இதுபற்றிய கூடுதல் விவரங்களை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஏக்தா. ஃப்ளூரோசிஸ் (Fluorosis) ஃப்ளூரைடு (Fluoride) என்பது இயற்கையாக உருவாகும் ஒருவகை தாதுப்பொருள் (mineral). இது நிலத்தடி நீரில் காணப்படலாம். நாம் சாப்பிடும் பால், சர்க்கரை உள்ளிட்ட சில உணவுகளிலும் குறைந்த அளவில் காணப்படும். இவற்றை நாம் எடுத்துக்கொள்ளும்போது ஃப்ளூரைடு உடலின் உள்ளே செல்கிறது. நம் உடல் அளவுக்கு அதிகமாக ஃப்ளூரைடை கிரகிக்கும்போது ஏற்படும் பிரச்னைதான் ஃப்ளூரோசிஸ். இந்தப் பிரச்னை பற்களிலும் (Dental Fluorosis) அல்லது எலும்பிலும் (Skeletal Fluorosis) ஏற்படலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை... பற்களில் வெள்ளை நிற புள்ளிகள், பழுப்பு நிறமாக மாறுவது, பற்களின் மேலே உள்ள லேயரான எனாமல் நீங்கி உடைவது (Chi...