Skip to main content

Doctor Vikatan: சருமத்தில் உள்ள Sun tan-ஐ நீக்க வீட்டு சிகிச்சை உதவுமா?

Doctor Vikatan: என் வயது 28. தினமும் ஒரு மணி நேரம் பயணம் செய்து வேலைக்குச் செல்கிறேன். சன் ஸ்கிரீன் உபயோகித்தாலுமே என் சருமம் வெயில் பட்டு, கருத்துப் போகிறது. அப்படிக் கருத்துப்போன அடையாளம் முகத்தில் திட்டுத்திட்டாக (Sun tan) கறுப்பாகப் படிந்திருக்கிறது. அதை நிரந்தரமாகப் போக்க முடியுமா.... வீட்டிலேயே ஏதேனும் சிகிச்சைகள் செய்து சருமத்தை பழைய நிறத்துக்குக் கொண்டு வர முடியுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.

கீதா அஷோக்

Sun tan வராமலிருக்க வேண்டும் என்றால், சன் ஸ்கிரீனை தேர்வுசெய்வதிலிருந்தே அதற்கான அக்கறை தொடங்க வேண்டும். சிலர் காலையில் தடவிக்கொண்டு செல்லும் சன்ஸ்கிரீனுடனேயே மாலை வரை இருப்பார்கள். ஆனால், அது போதாது. உதாரணத்துக்கு, சன் ஸ்கிரீனில் எஸ்பிஎஃப் (SPF) 15 எனக் குறிப்பிட்டிருந்தால், அதைத் தடவியதிலிருந்து 45 நிமிடங்கள்வரைதான் பாதுகாப்பு கொடுக்கும்.  அதன் பிறகு வெயிலின் தாக்கமானது சருமத்துக்குள் ஊடுருவ ஆரம்பிக்கும். எனவே, நாம் எத்தனை மணி நேரம் வெயிலில் இருக்கிறோம், எந்த ஊரில் இருக்கிறோம், எந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து, அதற்கேற்ப எஸ்பிஎஃப் (SPF) உள்ள சன் ஸ்கிரீனை தேர்வு செய்ய வேண்டும். வெயில் அதிகமுள்ள சூழலில் அதிக எஸ்பிஎஃப் உள்ள சன் ஸ்கிரீனை உபயோகிக்க வேண்டும். சன் ஸ்கிரீன் உபயோகித்தாலும் சருமம் கருத்துப் போக இதுதான் முக்கிய காரணம்.

வெயில் பட்டுக் கருத்துப்போன சருமம், அது நீண்டநாள் தாக்கத்தின் விளைவாக உருவாகியிருக்கும் பட்சத்தில், பிக்மென்ட்டேஷன் (pigmentation) எனும் பிரச்னையாக மாறும். அதாவது, வெயிலில் செல்லும்போது சருமத்துக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் செல்வது, நீண்ட நாள்கள் அப்படியே இருப்பதெல்லாம்  வாயைச் சுற்றி, நெற்றியைச் சுற்றி கரும்படலத்தை ஏற்படுத்தும். அந்த நிலைக்குச் செல்லாமல் தடுப்பதுதான் முக்கியம். ஒருவேளை அப்படி கரும்படலம் வந்துவிட்டால், வீட்டு சிகிச்சைகள் எல்லாம் உதவாது. பிரத்யேக சிகிச்சைகள் தேவைப்படும்.

வெயிலில் அலைந்துவிட்டு வந்ததும் அன்றைய தினமே செய்கிற சில சிகிச்சைகளால், சருமத்தில் ஏற்பட்ட கருமை உடனடியாக மறைந்துவிடும். அடுத்த நாள் காலையே சருமம் பளிச்சென இருக்கும். சன் ஸ்கிரீன் உபயோகிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், குடை உபயோகிப்பது, தொப்பி உபயோகிப்பது, ஸ்கார்ஃப் கட்டிக்கொள்வது போன்றவை கூடுதல் பலன்களைத் தரும். 

Sunscreen

மருந்துக் கடைகளில் கேலமைன் ஐபி லோஷன் (Calamine Lotion Ip) என கிடைக்கும். லாக்டோ கேலமைனையும் இதையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.  வெயிலில் அலைந்துவிட்டு வந்த தினம் மாலை, கேலமைன் ஐ.பி லோஷனில் கால் டீஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்க்க வேண்டும். பேக்கிங் சோடா சேர்த்ததும் அந்தக் கலவை நுரைத்து வரும். அந்த நுரை அடங்குவதற்குள் அதை எடுத்து சருமத்தில் கருத்துப்போன இடங்களின்மேல் தடவ வேண்டும். முகம், கழுத்து, கை, கால்கள், முதுகு என எல்லா பகுதிகளிலும் இதைத் தடவலாம். நன்றாகக் காய்ந்த பிறகு துடைத்து எடுக்க வேண்டும். புளித்த தயிரை நன்கு அடித்துக்கொண்டு, அதில் ஓட்ஸை பொடித்துப் போட்டு, இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள்  சேர்த்துக் கலந்து முகத்தில் தடவவும்.

தினமும் கேலமைன் ஐபி லோஷனும், வார இறுதியில் தயிர்- ஓட்ஸ் பேக்கும் போட்டு வந்தால் வெயில் பட்டுக் கருத்துப்போன (Sun tan) சருமம் பழைய நிறத்துக்குத் திரும்பும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலத்துக்கு சருமத்தின் நிறத்தை ஒரு ஷேடு லைட்டாக மாற்றும் தன்மை உண்டு. இவை தவிர, 'இன்ஹிபிஷன் தெரபி' (Inhibition Therapy) என  ஒரு சிகிச்சை உண்டு. இதை சருமநல மருத்துவர்கள் மற்றும் சரும சிகிச்சை நிபுணர்களிடம் செய்து கொள்வதும் பலனளிக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...