ஒரு நல்ல உணவு வயிற்றை மட்டுமல்ல மனதையும் நிரப்பிவிடும்.
`இந்தப் பொழப்பு தான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது’ என பல உணவகங்களைத் தேடித் தேடி உண்ணும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஊர், இடம், கடையின் பெயர் என ஓர் உணவைச் சொன்னாலே அது இங்க தான் ஃபேமஸ் எனச் சொல்லும் மக்கள் இருக்கின்றனர்.
வெளியில் சாப்பிட்டாலும் வீடுகளில் செய்யப்படும் உணவுகள் தனிரகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரின் சுவைக்கு ஏற்ப பெண்கள் சமையல் செய்வதுண்டு.
இந்நிலையில் பிரபல வோக் (VOGUE) இதழானது, உலகின் எந்தெந்த நாடுகளில், பெண்கள் மிகச் சுவையாகவும், அதிக வெரைட்டிகளிலும் சமைக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. அதில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
உலகில் பெண்கள் மிகச் சுவையாகவும், அதிக வெரைட்டிகளிலும் சமைக்கும் முதல் ஐந்து நாடுகள்…
*இத்தாலி: இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பது இத்தாலி. இங்குள்ள பெண்கள் பாஸ்தா மற்றும் சாஸ்களில் பல வகையான உணவுகளைத் தயாரிக்கிறார்கள்.
*ஜப்பான்: இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் ஜப்பான் இருக்கிறது. ஜப்பானிய பெண்கள் தாங்கள் தயாரிக்கும் உணவுகளைக் கலைநயத்தோடு காட்சிப்படுத்துவதில் கை தேர்ந்தவர்கள். சுஷி மற்றும் பாரம்பர்ய ஜப்பானிய இரவு உணவான கைசேகி (Kaiseki) தயாரிப்பதன் மூலம் பிரபலமாக அறியப்படுகிறார்கள்
*மெக்சிகோ: மூன்றாவது இடத்தில் மெக்சிகோ இருக்கிறது. மெக்சிகன் பெண்கள் டாகோஸ் (tacos) மற்றும் மோல் (Mole) போன்ற உணவுகளில் உள்நாட்டு மசாலாக்கள் மற்றும் மூலிகைகளைப் பயன்படுத்திச் சமைக்கிறார்கள்.
*பிரான்ஸ்: இரண்டாவது இடத்தை பிரான்ஸ் பிடித்துள்ளது. பாரம்பர்ய முறைகளைப் பயன்படுத்தி மிகவும் நுணுக்கமாக கோகோ வேன் மற்றும் நேர்த்தியான கேக்குகளை (pastries) தயாரிக்கின்றனர்.
*இந்தியா: இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இந்தியா. உலகளவில் சிறந்த சமையல்காரர்களாக இந்திய பெண்கள் உள்ளனர். இந்தியாவின் பல பகுதிகளிலும் வித்தியாசமான முறைகளில் வித விதமான உணவுகளை பெண்கள் செய்கின்றனர்.
Comments
Post a Comment