Skip to main content

Trump: 34 குற்றச்சாட்டுகளில் `குற்றவாளி' எனத் தீர்ப்பு... `தான் அப்பாவி’ எனக் குமுறும் ட்ரம்ப்!

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் அமெரிக்கத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் அதிபராக வெள்ளை மாளிகைக்குள் நுழையலாம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump), நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறார்.டொனால்ட் டிரம்ப்

முன்னதாக ஸ்டோர்மி டேனியல்ஸ் (Stormy Daniels), முன்னாள் அதிபர் ட்ரம்ப் 2006-ல் தன்னுடன் உடலுறவு கொண்டதாகவும், 2016 அமெரிக்கத் தேர்தலில் அவர் போட்டியிடும்போது இதைப்பற்றி வெளியில் கூறாமலிருக்க தனக்கு 1,30,000 டாலர் கொடுத்ததாகவும் மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.ஸ்டோர்மி டேனியல்ஸ் - டொனால்ட் டிரம்ப்

பின்னர், இதில் ட்ரம்ப் தனது முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலம் ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு அவர் பணம் கொடுத்திருப்பது தெரியவந்தது. அமெரிக்காவில், நடிகைக்கு அவர் பணம் கொடுத்தது சட்டப்படி தவறு இல்லை என்றாலும், தன்னுடைய தேர்தல் பிரசாரத்துக்கு உதவும் வகையில் அந்தச் செலவை சட்ட செலவுகள் என தேர்தலில் ஆவணங்களைத் தாக்கல்செய்தது பெடரல் பிரசார நிதிச் சட்டத்தை மீறிய செயல் என்று அரசு தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, பொய்யான வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்ததாக டிரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் பதிவுசெய்யப்பட்டது. இந்த நிலையில், நியூயார்க் நடுவர் மன்றம் ட்ரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகளில் அவரைக் குற்றவாளி என நேற்று தீர்ப்பளித்தது. இதன்மூலம், அமெரிக்காவில் குற்றச்செயலில் தண்டனை பெற்ற முதல் அமெரிக்க முன்னாள் அதிபரானார் ட்ரம்ப். மேலும், அமெரிக்காவில் பொய்யான வணிகப் பரிவர்த்தனை பதிவுகளுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று கூறப்படும் நிலையில், தண்டனை விவரங்கள் ஜூலை 11-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.டொனால்ட் டிரம்ப்

இருப்பினும், ட்ரம்ப் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வார் என்று கூறப்படுகிறது. குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு நீதிமன்றத்துக்கு வெளியே பேசிய டிரம்ப், ``நான் மிகவும் அப்பாவி. இந்த நாட்டுக்காகவும், அரசியலமைப்புக்காகவும் நான் போராடுகிறேன். இங்கு என்ன நடந்தது என்பதை அனைவருமே அறிவர். இதுவொரு மோசமான விசாரணை. உண்மையான தீர்ப்பு நவம்பர் 5-ம் தேதி மக்கள் அளிப்பார்கள்" என்று கூறினார். இன்னொருபக்கம், நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பை வரவேற்ற அதிபர் ஜோ பைடன் தரப்பு, `சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்பதை நியூயார்க் நீதிமன்றத்தில் நாங்கள் இன்று கண்டோம்' என்று தெரிவித்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88`மகாத்மா காந்தி குறித்த மோடியின் கருத்து... வெடித்தெழுந்த காங்கிரஸ் தலைவர்கள்!' - என்ன நடந்தது?


http://dlvr.it/T7db6G

Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...