உத்தர பிரதேச மாநிலத்தின் 10-ம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த பிராச்சி நிகத்தை (Prachi Nigam) யாராலும் மறக்க முடியாது. தனது கடின உழைப்பால் அம்மாணவி 98.5 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், அவரது முகத்தில் அதிகப்படியான முடி வளர்ந்திருப்பதற்காக கிண்டல் செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து சில வாரங்கள் கழித்து நிகம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான மெசேஜ் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் இன்ஸ்டா இன்ஃப்ளுயன்சரான அனிஷ் பகத் சீதாபூர் மஹ்முதாபாத்தில் உள்ள பிராச்சி நிகத்தின் வீட்டிற்குச் செல்கிறார். பூக்கள் கொடுத்து நிகத்திற்கு வாழ்த்து தெரிவித்தவர், `பெரும்பாலான மக்கள் அவள் எப்படி இருக்கிறாள் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினர். அவள் பாராட்டப்படுவதற்கு பதிலாக, அவள் முழு தேசத்தாலும் கொடுமைப்படுத்தப்பட்டாள்.
ஏன்! பெரும்பாலான பெண்கள் தங்களது வாழ்வில் இதனை அனுபவிக்கிறார்கள். அதனால் முழு தேசமும் பார்க்கத் தகுதியான ஒரு பிரகாசத்தை (glow-up) அவளுக்கு வழங்க முடிவு செய்தேன்’ என்று பேசியுள்ளார். அதன்பின் பிராச்சி நிகத்திற்கு மஸ்காரா, நெயில் பாலிஷ், ஹேர் ஸ்டைல் செய்து மேக் அப் போட்டு விட்டார்.
அந்த வீடியோவின் முடிவில் பிராச்சி நிகம் சொன்ன வார்த்தைகள் தான் அனைவருக்குமான பாடம். `அன்புள்ள பெண்களே, ஒரு போதும் உடைக்கப்படாத ஒன்றை சரிசெய்ய முயற்சி செய்யாதீர்கள்’ என்று அதே புன்னகை முகத்தோடு கூறினார். இந்த வீடியோவை பகிர்ந்த பகத், `இது ட்ரோல்களை நிறுத்தும் என்று நம்புகிறேன்' என்று கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.
ஆம்! உங்களை உடைக்காத ஒன்றை சரிசெய்ய முயற்சி செய்யாதீர்கள், உறுதியோடு இருங்கள்!
Comments
Post a Comment