காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய தேவைகள் பற்றி பள்ளிக் கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பூவுலகின் நண்பர்கள் மற்றும் தொன் போஸ்கோ இணைந்து நடத்திய ``இளையோரும் காலநிலையும்" என்ற ஒருநாள் கருத்தரங்கத்தை அக்டோபர் 28-ம் தேதி சென்னை சாந்தோமில் நடந்தது. இதில், சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள், திரைத்துறை பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், அமைச்சர், ஐ.ஏ.எஸ் அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாணவர்கள் `மனிதன் பூவுலகின் தாதா அல்ல!' நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துப் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், ``எந்த உயிரினமும் மனிதனைத் தேடி வருவதில்லை. ஆனால், நாம்தான் மற்ற உயிரினங்களில் வாழ்விடங்களை தேடிச்சென்று ஆக்கிரமித்து அழித்துக்கொண்டிருக்கிறோம். யானைகள் வலசைப் போகும் காட்டுப்பாதைகளை மறித்து ரயில்வே, ஈஷா, காருண்யா என கட்டடங்கள் கட்டிக்கொண்டிருக்கிறோம். நாம் எல்லோருக்கும் நாம்தான் இந்தப் `பூவுலகின் தாதா', இந்த இயற்கையை நம்மால் கட்டுப்படுத்தமுடியும் என தவறாக நினைத்துக்கொண்டிர...