கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பண்டிகைகள் முடக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த ஆண்டு தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து, எல்லா நாடுகளிலும் பண்டிகைகள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தென் கொரியாவின் தலைநகர் சியோலிலுள்ள ஒரு முக்கியமான சந்தை ஒன்றில், ஹாலோவீன் கொண்டாட்டங்களுக்காகத் திரளான மக்கள் கூடியிருந்தனர் . நேற்று (29-10-22) இரவு சுமார் 1 லட்சம் மக்கள் மத்திய மாவட்டமான இட்டாவோனில் பண்டிகைக்காகக் கூடினர் என உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கொண்டாடத்தில் ஏற்பட்ட அதீத கூட்ட நெரிசல் காரணமாகப் பலர் மயங்கியுள்ளனர். அதையடுத்து, தீயணைப்புத் துறைக்கு இரவு 10:30 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே 100-க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்களும் மற்றவர்களுக்கு CPR முறையில் முதலுதவி செய்திருக்கின்றனர்.
சம்பவ இடத்தில் சுமார் 140 அவசர வாகனங்களில், 300 வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால், துரதிஷ்டவசமாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. பிடிஐ செய்தி நிறுவனத்தின் சமீபத்திய தரவுகளின்படி 149 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், சுமார் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது. பெரும்பாலும் காயமடைந்தவர்கள் 20 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் என்கிறது தென் கொரியாவின் உள்ளூர் ஊடகம்.
Absolute scenes of chaos in Itaewon right now as the Halloween night has turned into a major safety hazard with at least several party-goers being carried into ambulances. pic.twitter.com/JqVpbYiFrv— Hyunsu Yim (@hyunsuinseoul) October 29, 2022
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஜனாதிபதி யூன் சுக்-யோல் செய்தித் தொடர்பாளர் மூலம் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், "பொது நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் தலைமையிலான அனைத்து அமைச்சர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்கும் வகையில் அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்தோனேசியா: கால்பந்து மைதானத்தில் வெடித்த கலவரம்; 129 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
http://dlvr.it/SbxCG8
http://dlvr.it/SbxCG8
Comments
Post a Comment