இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக்: `இந்தியாவிலும் அது நடக்குமா?'- மோதிக்கொண்ட பாஜக Vs எதிர்க்கட்சிகள்!
இந்திய வம்சாவளியான ரிஷி சுனக், இங்கிலாந்து பிரதமராகத் தேர்வாகியிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்து இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து கூறிவருகின்றனர். மேலும், பல்லாண்டு காலமாக இந்தியாவை காலனியாதிக்கத்துக்குள் வைத்திருந்த ஒரு நாட்டை நம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் ஆளப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டு பலரும் சமூக வலைதளங்களில் பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் ரிஷி சுனக் புகைப்படத்துடன் `இந்து பிரதமர்' #hinduprimeminister என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர்.ரிஷி சுனக்
இந்த நிலையில், `இதில் பெருமிதப்பட்டுக்கொள்ள என்ன இருக்கிறது? இங்கிலாந்து, அமெரிக்காவில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் பிரதமர், துணை அதிபர் போன்ற உயரிய பதவிக்கு வரமுடிகிறது. அதேபோல, இந்தியாவில் சிறுபான்மையினராக இருக்கும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அதுபோன்ற உயரிய பதவிக்கு வரக்கூடிய சூழல் இங்கு நிலவுகிறதா?' எனக் கேள்விகேட்டு கடுமை காட்டி வருகின்றனர் எதிர்க்கட்சியினர்.பிரதமரானார் ரிஷி சுனக் |நைஜீரியா; முன்னாள் அமைச்சர் வீடு, கார் பறிமுதல் - உலகச் செய்திகள் ரவுண்ட்அப்
எதிர்க்கட்சிகள் கொட்டிய விமர்சனங்கள்:
குறிப்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ``முதலில் கமலா ஹாரிஸ், இப்போது ரிஷி சுனக், அமெரிக்கா, இங்கிலாந்து மக்கள் தங்கள் நாடுகளின் பெரும்பான்மை அல்லாத குடிமக்களை அரவணைத்து, அரசாங்கத்தில் உயர் பதவிக்கு தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இதிலிருந்து, இந்தியாவும், 'பெரும்பான்மைவாதத்தை கடைப்பிடிக்கும் கட்சிகளும்' கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இருப்பதாக நான் நினைக்கிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார். ப.சிதம்பரம்
அதே போல, காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சசி தரூரும் தனது ட்விட்டர் பக்கத்தில், ``சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை மிகவும் சக்தி வாய்ந்த பதவியில் அமர்த்தி, பிரிட்டன் மக்கள் உலக அளவில் மிகவும் அரிதான ஒன்றைச் செய்திருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்தியர்களாகிய நாம் ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராவதை கொண்டாடும் அதேசயம் நேர்மையான கேள்வி ஒன்றையும் நான் கேட்கிறேன். அதுபோன்று இங்கே நடக்குமா?" என கேள்வி எழுப்பியிருக்கிறார்.ரிஷி சுனக்: மன்னரைவிட இருமடங்கு சொத்து; பகவத் கீதை மீது பதவிப் பிரமாணம் - பிரிட்டன் பிரதமரின் கதைசசி தரூர்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ``இந்தியா மிகவும் சகிப்புத்தன்மையுடனும், அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்ளும் நாடாக இருக்கட்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், பி.டி.பி கட்சித் தலைவரும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி, ``இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் முதன்முறையாக பிரிட்டன் பிரதமாராவது பெருமைமிக்க தருணம். இங்கிலாந்து, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் இங்கு மறுபுறம், என்.ஆர்.சி., சி.ஏ.ஏ போன்ற பிளவுபடுத்தும் பாரபட்சமான சட்டங்களால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறோம்" என விமர்சித்திருக்கிறார்.
தொடர்ந்து, பத்திரிக்கையாளர் அர்ஃபா கான் ஷெர்வானி, ``இந்தியா எப்போது ஒரு முஸ்லிமை பிரதமராக ஏற்றுக்கொள்ளத் தயாராகும்" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.``இந்த நிலைக்குச் சுயமாக வந்திருக்கிறேன்; சசி தரூருடன் என்னை ஒப்பிடாதீர்கள்!" - மல்லிகார்ஜுன கார்கேமெகபூபா முஃப்திகாங்கிரஸ்: சோனியா குடும்ப விசுவாசி கார்கேவுக்குக் காத்திருக்கும் முக்கியச் சவால்கள் என்னென்ன?
பா.ஜ.க தந்த பதிலுரைகள்:
இந்த விமர்சனங்களுக்குப் பதிலடிகொடுக்கும் வகையில் பா.ஜ.க தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக பா.ஜ.க மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், ``ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சில தலைவர்கள் பெரும்பான்மைவாதத்திற்கு எதிராக தீவிரமாகப் பேசி வருகின்றனர். அவர்களுக்கு, பிரதமராக மன்மோகன் சிங்கின் 10 ஆண்டுக்கால ஆட்சி, ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் சிறப்பான குடியரசுத் தன்மையை நான் நினைவூட்டுகிறேன். இப்போது, பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு ஜனாதிபதியாக இருக்கிறார்" எனக் கூறியிருக்கிறார். ரவிசங்கர் பிரசாத்,``ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதில் நேதாஜி படம் வேண்டும்" - இந்து மகாசபை கோரிக்கை
மேலும், மெகபூபா முப்ஃதிக்கு பதிலடிகொடுக்கும் விதமாக, ``முதலில் முப்தி ஜியால் ஜம்மு-காஷ்மீரில் உள்ள சிறுபான்மையினரை அந்த மாநில முதல்வராக ஏற்றுக்கொள்ள முடியுமா?" எனக் கேள்வியும் எழுப்பியிருக்கிறார். பா.ஜ.க தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் அமித் மால்வியாவும் அதே கருத்தை தெரிவித்திருக்கிறார்.
பா.ஜ.க வெளியுறவுத் துறைத் தலைவர் விஜய் சௌதைவாலே, ``இந்திய வம்சாவளியைக் கொண்டு இங்கிலாந்தில் பிறந்த ரிஷி மற்றும் இத்தாலியில் பிறந்த சோனியாவையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். சோனியா ராஜீவ் காந்தியுடனான திருமணத்துக்குப் பிறகு பல ஆண்டுகள் இந்தியக் குடியுரிமை பெற மறுத்தார்" எனக் கூறியிருக்கிறார்.'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' இயக்குநர் விவேக் அக்னிஹோத்திரி
தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநரான விவேக் அக்னிஹோத்ரி, ``இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள், காஃபிர் என்ற வார்த்தையை தடைசெய்யும் போது, நிபந்தனைகளின்றி 'இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு' எதிராகப் பேசும்போது, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்று ஏற்றுக்கொண்டு, தங்களை பாரத நாட்டைச் சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டு, அதே உணர்வுடன், அர்ப்பணிப்புடன் `பாரத் மாதா கி ஜெ', `வந்தே மாதரம்' எனச் சொல்லும்போது சிறுபான்மையினர் இந்தியாவின் பிரதமராவது நடக்கும். நீங்கள் தயாரா?" எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.``புதிய ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லட்சுமி படங்கள்!" - நாடு வளம்பெற மோடிக்கு கெஜ்ரிவால் யோசனை
http://dlvr.it/Sbn8jZ
http://dlvr.it/Sbn8jZ
Comments
Post a Comment