அன்டார்டிகாவை தனியாக கடக்கும் ப்ரீட் சாண்டி|இரான் தாக்குதலில் 15 பேர் பலி-உலகச் செய்திகள் ரவுண்ட்அப்
இரானின் ஷிராஸ் பகுதியில் தொழுகை நடத்தும் இடத்தில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர், கால்பந்து ஆட்டத்தைக் காண கத்தார் செல்லும் ரசிகர்கள் குறிப்பாக தன்பாலின ஈர்ப்பாளர்கள் அந்த நாட்டின் விதிகளைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஃபேஸ்புக் மெட்டா
மெட்டா நிறுவனம் தனது லாபத்தில் பாதி அளவை மட்டுமே ஈட்டியுள்ளதால், முக்கிய மாற்றங்கள் கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பிரபல பிரஞ்சு ஓவியர் பியெர்ரெ சௌலேஜஸ் காலமானார். அவருக்கு வயது 102.
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் ஜெர்மனியின் சான்செலர் ஒலாஃப் ஷோல்ஸ் சந்திப்பு.
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் முதன்முறையாக ஆண்களைவிடப் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
சூடானில் ஓர் ஆண்டுக்கு மேலாக ராணுவ ஆட்சி நிலவுவதால், மக்களாட்சி வேண்டி மக்கள் வீதிகளில் போராட்டம்.
அன்டார்டிகாவைத் தனியாகக் கடக்க திட்டமிட்டுள்ள ப்ரீட் சாண்டிக்கு ஆதரவு பெருகிவருகிறது.
இந்தோனேசியாவில் பைத்தான் பாம்பின் வயிற்றில் முழு பெண்ணின் உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/SbrGYg
http://dlvr.it/SbrGYg
Comments
Post a Comment