Skip to main content

ஹிஜாப் எதிர்ப்பு பேரணி; பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி! - இரானில் பதற்றம்

இரானில் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி, மஹ்சா அமினி என்ற 22 வயது பெண், ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கில், போலீஸ் காவலில் மர்மமான முறையில் இறந்தார். அதைத் தொடர்ந்து, ஹிஜாபுக்கு எதிரான போராட்டம் இரான் முழுவதும் வெடித்தது. இந்தப் போராட்டத்தால் இரானில் அமைதியின்மை நிலவிவருகிறது. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு, மஹ்சா அமினி இறந்து 40 நாள்கள் ஆனதைக் குறிக்கும் வகையில் அவரது சொந்த ஊரில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாகச் சென்றனர். stunning video coming out of iran in mahsa amini’s hometown of saqez, thousands ignore govt road closures to walk to her gravesite 40 days after her death in the custody of iran’s morality policepic.twitter.com/u6EvbGQtjw— ian bremmer (@ianbremmer) October 26, 2022 அவர்கள்மீது இரானிய பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, மனித உரிமைகள் தன்னார்வத் தொண்டு நிறுவனமான அம்னெஸ்டி இன்டர்நேஷனல், ``ஹிஜாபுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திவரும் எதிர்ப்பாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டனர். பொறுப்பற்ற மற்றும் சட்டவிரோத துப்பாக்கிச்சூட்டை, மனித உரிமைகள் தொண்டு நிறுவனம் என்கிற முறையில் கண்டிக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது Singing the Kurdish song "Don't leave me alone" at #Zhina_Amini's tomb Wednesday, October 26#Kurdistan#MahsaAminipic.twitter.com/Cp2XoV0nfu— Hengaw Organization for Human Rights (@Hengaw_English) October 26, 2022 இந்த நிலையில், இரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி, ``மஹ்சா அமினியின் மரணம் காரணமாக ஏற்பட்ட சீற்றத்தால் நாடு தழுவிய அமைதியின்மை நிலவுகிறது. இந்தச் சீற்றத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் இன்னும் தூண்டுகின்றன. இஸ்லாமியக் குடியரசை நாசப்படுத்துவதற்காக அமைதியின்மையைத் தூண்டுபவர்கள் கடுமையான தண்டனைக்குத் தகுதியானவர்கள்" என்று எச்சரித்திருக்கிறார்.ஈரான் பெண்களுக்கு ஆதரவாக உலகம் முழுக்க தலைமுடியை வெட்டும் பெண்கள்... வலுக்கும் எதிர்ப்பு!
http://dlvr.it/Sbv6kB

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...