சிலருக்கு குறிப்பிட்ட சில உணவுகளைச் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும். மீன்கள், காளான்கள் சாப்பிட்டால் அலர்ஜி உண்டாகும் என பலர் கூறுவதைக் கேட்டிருப்போம். அதனால் தாங்கள் சாப்பிடும் உணவுகளை மிகவும் கவனமாகப் பார்த்துப் பார்த்து சாப்பிடும் பழக்கம் இவர்களிடையே இருக்கும். உணவு (சித்தரிப்பு படம்) Doctor Vikatan: தேங்காய், புளி சேர்த்த உணவுகளைச் சாப்பிட்டால் நெஞ்சு அடைப்பது ஏன்? இன்னும் ஹோட்டல்களுக்கு செல்லும்போது கூடுதல் கவனத்துடன் தாங்கள் உண்ணும் உணவுகளை ஆராய்ந்த பின்னரே சாப்பிடுவார்கள். இந்த நிலையில் நபர் ஒருவர் உணவகத்தில் தனக்கு அலர்ஜி இருப்பதாக 17 உணவுப் பொருள்களைக் குறிப்பிட்டு பேப்பர் ஒன்றை கொடுத்திருக்கிறார். இந்த பேப்பரை புகைப்படம் எடுத்து ரெட்டிட் தள பயனர் ஒருவர் வெளியிட அது இணையவாசிகள் மத்தியில் கவனத்தைப் பெற்றது. அந்தப் புகைப்படத்தில், ``பின்வரும் உணவுகளை உண்ண முடியாது. புதிதாக இல்லாத அல்லது உறையாமல் இருக்கும் புரதம், அவகேடோ, உலர் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழங்கள், கத்திரிக்காய், கீரை, சோயா, தக்காளி, சாக்லேட், பீன்ஸ், ஆல்கஹால், ஊறுகாய், பழைய சீஸ், சில மீன்கள் மற்றும் வெண்ண...