Skip to main content

``இதெல்லாம் அலர்ஜி” லிஸ்ட்டை நீட்டிய கஸ்டமர்... டென்ஷன் ஆன ரெஸ்டாரன்ட் ஊழியர்..!

சிலருக்கு குறிப்பிட்ட சில உணவுகளைச் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும். மீன்கள், காளான்கள் சாப்பிட்டால் அலர்ஜி உண்டாகும் என பலர் கூறுவதைக் கேட்டிருப்போம். அதனால் தாங்கள் சாப்பிடும் உணவுகளை மிகவும் கவனமாகப் பார்த்துப் பார்த்து சாப்பிடும் பழக்கம் இவர்களிடையே இருக்கும்.

உணவு (சித்தரிப்பு படம்)

இன்னும் ஹோட்டல்களுக்கு செல்லும்போது கூடுதல் கவனத்துடன் தாங்கள் உண்ணும் உணவுகளை ஆராய்ந்த பின்னரே சாப்பிடுவார்கள்.

இந்த நிலையில் நபர் ஒருவர் உணவகத்தில் தனக்கு அலர்ஜி இருப்பதாக 17 உணவுப் பொருள்களைக் குறிப்பிட்டு பேப்பர் ஒன்றை கொடுத்திருக்கிறார். இந்த பேப்பரை புகைப்படம் எடுத்து ரெட்டிட் தள பயனர் ஒருவர் வெளியிட அது இணையவாசிகள் மத்தியில் கவனத்தைப் பெற்றது.

அந்தப் புகைப்படத்தில், ``பின்வரும் உணவுகளை உண்ண முடியாது. புதிதாக இல்லாத அல்லது உறையாமல் இருக்கும் புரதம், அவகேடோ, உலர் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழங்கள், கத்திரிக்காய், கீரை, சோயா, தக்காளி, சாக்லேட், பீன்ஸ், ஆல்கஹால், ஊறுகாய், பழைய சீஸ், சில மீன்கள் மற்றும் வெண்ணெய் போன்ற பல உணவுப் பொருள்களுக்கு அலர்ஜி உள்ளது'' என அதில் குறிக்கப்பட்டுள்ளது.

17 உணவுகளுக்கு அலர்ஜி!

இதனைக் கண்ட பலரும் சில உணவுகளில் அலர்ஜி இருக்கலாம். இத்தனை உணவுகளும் அலர்ஜியா என வியந்துள்ளனர்.

அதோடு ஒருவர் கமென்ட்டில், `இப்படி ஒருவர் 17 உணவு பொருள்கள் அலர்ஜி என பேப்பரை நீட்டினால், நீங்கள் வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடுவது நல்லது. செய்யப்படும் உணவுகளுக்கு இடையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள உணவுகள் சேர்க்கப்படாமல் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் உணவகத்தால் அளிக்க முடியாது. வெளியே அனுப்பி விடுவேன்’’ என்று கூறியுள்ளார். 

அலர்ஜியை ஏற்படுத்தும் உணவுகளைச் சாப்பிடும் பட்சத்தில், சில நேரங்களில் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம். எனவே குறிப்பிட்ட சில உணவுகளைச் சாப்பிட்டால் அலர்ஜி உண்டாகும் எனச் சொல்லும் நபர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...