Skip to main content

Doctor Vikatan: தேங்காய், புளி சேர்த்த உணவுகளைச் சாப்பிட்டால் நெஞ்சு அடைப்பது ஏன்?

Doctor Vikatan: தேங்காய், புளி சேர்த்த பொரியல், குழம்பு வகைகளைச் சாப்பிட்டதும் மொத்த உணவும் சில மணி நேரம் நெஞ்சுக்குழிக்குள் இருப்பதைப் போல உணர்கிறேன். காரணம் என்ன... இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறியை வைத்துப் பார்க்கும்போது இது அசிடிட்டி எனப்படும் அமிலம் எதுக்களிக்கும் பிரச்னைபோலவே தெரிகிறது. நீண்டகாலத்துக்கு நெஞ்செரிச்சல் பிரச்னை தொடரும்நிலையில், உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. அதைத் தவிர்ப்பதற்கு மருத்துவர்கள் ஆன்டாசிட் மருந்துகள் கொடுப்பார்கள்.

எனவே உங்களுக்கு அசிடிட்டி பிரச்னை ரொம்பகாலமாக இருந்ததா என்பதை செக் செய்ய வேண்டும். உணவை நீங்கள் சரியாக மென்று சாப்பிட வேண்டும்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள குழம்பு வகைகளில் புளி இருக்கும்.  புளி அவசியம்தான். ஆனால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் பிரச்னை இருக்கும்பட்சத்தில், புளியின் அமிலத்தன்மை காரணமாக, அது நெஞ்சுப்பகுதியை அடைப்பதுபோல உணரச் செய்யலாம். 

அசிடிட்டி

உணவை மென்று சாப்பிட வேண்டியதன் அவசியம் பலருக்கும் தெரிவதில்லை. உணவை நன்கு வேகவைத்துச் சாப்பிட வேண்டியதும் அவசியம். தொண்டைப்பகுதியில் உணவு அடைப்பது போன்று உணரும்போது சிலர், தண்ணீர் குடித்துக் குடித்து உணவை விழுங்குவார்கள். இது தவறு.

முதலில் உங்களுக்கு அசிடிட்டி பிரச்னை இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். எப்படிப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது இப்படி உணர்கிறார்கள் என்பதைக் குறித்துவைத்துக்கொண்டு, மருத்துவரிடம் செல்லும்போது விளக்கமாகச் சொன்னால், மருத்துவரால் சரியான சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும். தேவைப்பட்டால் எண்டாஸ்கோப்பி பரிசோதனை செய்யச் சொல்வார்கள். தேங்காய், புளி சேர்த்த உணவுகளை நிறுத்துவது மட்டும்  தீர்வாகாது. பிரச்னைக்கான காரணம் அறிந்து சிகிச்சை எடுத்தால்தான் அந்த பாதிப்பு மீண்டும் வராமலிருக்கும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...