Skip to main content

Doctor Vikatan: கண் ஆபரேஷனுக்காக இன்சுலின் ஊசிக்கு மாற்றம்: இனி ஊசியா, மாத்திரையா.. எதைத் தொடர்வது?

Doctor Vikatan: என் வயது 60. ரத்தச் சர்க்கரை அளவு  360 இருந்தது. இரண்டு கண்களிலும் கண்புரை இருந்தது. அதை சரிசெய்வதற்கான ஆபரேஷன் செய்ய தினமும் இரண்டு வேளை  இன்சுலின் ஊசி  போடச் சொன்னார் மருத்துவர். அதையடுத்து ரத்தச் சர்க்கரை அளவு  180 ஆகக் குறைந்தது.  கண்புரை நீக்க ஆபரேஷனும் முடிந்துவிட்டது.  இனி இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்தலாமா... பழையபடி மாத்திரை மட்டும் சாப்பிடலாமா?
- Abdul Rasheed, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

கண் மருத்துவர் விஜய் ஷங்கர்

உங்களுக்கு ரத்தச் சர்க்கரை அளவானது 360- ஆக இருந்ததைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அது மிகவும் மோசமான அளவு. கட்டுப்பாடற்ற ரத்தச் சர்க்கரை அளவை அறுவை சிகிச்சைக்காக இன்சுலின் ஊசி போட்டுக் குறைத்திருக்கிறீர்கள். அறுவை சிகிச்சை முடிந்துவிட்ட நிலையில் தற்போது உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவு என்னவென்று தெரியவில்லை.

நீங்கள் உங்கள் நீரிழிவுநோய் மருத்துவரிடம் அடிக்கடி  ஆலோசனை பெறுகிறீர்களா என்றும் தெரியவில்லை. உங்களுடைய சர்க்கரைநோய் பின்னணி தெரிந்த அவர்தான், அதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதையும் முடிவுசெய்வார்.  ஹெச்பிஏ1சி ( HbA1C ) என்ற டெஸ்ட்டை செய்து பார்ப்பதன் மூலம், உங்களுடைய மூன்றுமாத சராசரி சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்ள முடியும். 

நீரிழிவு நோய்

டெஸ்ட் ரிசல்ட்டின் அடிப்படையில், ஒருவேளை உங்களுக்கு ரத்தச் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பது தெரிந்தால், இன்சுலினை நிறுத்திவிட்டு மறுபடி மாத்திரைகளைத் தொடர உங்கள் நீரிழிவு மருத்துவர் அறிவுறுத்துவார். அப்படியில்லாமல் அறுவை சிகிச்சைக்குப் பிறகும் உங்களுக்கு ரத்தச் சர்க்கரை அளவு அதிகமாகவே இருப்பது தெரிந்தால், இன்சுலின் ஊசியை தொடரவும் அறிவுறுத்துவார்.

எனவே இந்த விஷயத்தில் முடிவெடுப்பதும் அறிவுறுத்துவதும் உங்களுடைய நீரிழிவு மருத்துவரின் கையில்தான் இருக்கிறது. எனவே குறிப்பிட்ட இடைவெளிகளில் நீரிழிவு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

ரத்தச் சர்க்கரையின் ஏற்ற, இறக்கத்துக்கேற்ப, நீங்கள் ஏற்கெனவே எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் மாற்றம் தேவையா என்பதை மருத்துவர் முடிவுசெய்வார். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...