தெற்காசியா மற்றும் மத்தியக்கிழக்கு பிராந்தியத்தின் முதல் மற்றும் ஒரே மையமான அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவை (PICU) தொடங்கியிருக்கிறது. நோயாளிகளுக்கு மிக உயர்ந்த தரத்தில் சிகிச்சையை வழங்க வேண்டுமென்ற அதன் பொறுப்புறுதியை இது மேலும் வலுப்படுத்துகிறது. குழந்தைகளுக்கான இப்புதிய பிரிவை தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. பி. கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட் - ன் குழு, புற்றுநோயியல் மற்றும் இன்டர்நேஷனல் துறையின் இயக்குனர் திரு. ஹர்ஷத் ரெட்டி, இரத்த புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ரம்யா உப்புலூரி, தீவிர சிகிச்சை சிறப்பு மருத்துவர் டாக்டர். ஸ்ருதி கக்கலாரா, கதிர்வீச்சு புற்றுநோயியல் (குழந்தைகள்) துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஸ்ரீனிவாஸ் சிலுகுரி மற்றும் மூளை – நரம்பியல் அறுவைசிகிச்சை பிரிவின் முதுநிலை நிபுணர் டாக்டர். அரவிந்த் சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் முழுமையான மற்றும் சிறப்பான புற்...