பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடியதோடு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி, உரிமைகளைப் பெற்றுக்கொடுத்த தன்னிகரற்ற தலைவர் அம்பேத்கர். அமெரிக்காவில் அவர் இருந்த காலம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் அம்பேத்கர்தான்.
கடந்த 1913-ம் ஆண்டு, நியூயார்க் நகரத்தில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பிஹெச்டி படித்துக் கொண்டிருந்தார் அம்பேத்கர். சர்வதேச அளவில் போற்றப்படக்கூடிய தலைவர்களில் அம்பேத்கர் எப்போதும் தனி இடத்தைப் பிடித்திருக்கிறார்.டாக்டர் B.R.அம்பேத்கர் வழி பெயர் சூட்டல் நிகழ்ச்சி!
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள 61 தெரு மற்றும் பிராட்வே சாலைக்கு `டாக்டர் B.R. அம்பேத்கர் சாலை’ (Dr.B.R.Ambedkar Way) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் பெயரிடும் நிகழ்ச்சி, ஜூன் 26 திங்களன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிரேஸ் மெங், மாநில செனட்டர் மைக்கேல் கியானரிஸ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டீவன் ராகா, கவுன்சில்வுமன் ஜூலி வோன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நியூயார்க்கில் உள்ள இந்தியாவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்த விழாவின் படங்களைப் பகிர்ந்து, "இந்திய அரசியலமைப்பின் சிற்பிக்கு வழங்கப்பட்ட மரியாதைக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளது.
In partnership with Shri Guru Ravidass Temple of NY, we co-named 61st Street and Broadway, “Dr. B.R. Ambedkar Way.” Along with @RepGraceMeng @StevenRaga @SenGianaris, today’s ceremony was attended by our hundreds of community members in #Woodside and from around the world (1/3) pic.twitter.com/bZiwUlkFIo— Council Member Julie Won (@CMJulieWon) June 25, 2023 அம்பேத்கர் வாழ்வில் சந்தித்த தீண்டாமையும், எதிரான போராட்டமும் | Ambedkar | Vikatan
விழாவில் பங்கேற்ற கவுன்சில் உறுப்பினர் ஜூலி வோன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், `நியூயார்க்கின் ஸ்ரீ குரு ரவிதாஸ் டெம்பிளுடன் இணைந்து நாங்கள் 61வது தெரு மற்றும் பிராட்வேக்கு `டாக்டர் B.R. அம்பேத்கர் சாலை’ என பெயரிட்டோம். இன்றைய விழாவில் உட்சைட் மற்றும் உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான எங்கள் சமூக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்’’ என்று பதிவிட்டுள்ளார்.
நியூயார்க் நகரத்தில் உள்ள தெருவிற்கு அம்பேத்கரின் பெயர் சூட்டி மரியாதை செய்ததற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
http://dlvr.it/SrS9yM
http://dlvr.it/SrS9yM
Comments
Post a Comment