திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டப் பணிகளை, மாநிலங்களுக்கான சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல்துறை இணையமைச்சர் நாராயணசாமி ஆய்வுமேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, ``மதுரையில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை நேற்று முன்தினம் ஆய்வுசெய்தேன். குடிசைப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்காகக் கட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. ஆய்வு
பெங்களூருவில் முதல் தரமான கட்டடத்தைக் கட்டுவதற்கு சதுர அடிக்கு 2,000 ரூபாய் முதல் 2,100 ரூபாய் வரை செலவு ஏற்படுகிறது. ஆனால், தமிழகத்தில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் தரமற்ற கட்டுமானப் பொருள்கள், மின் சாதனப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. வீடு கட்டுவதற்கு தமிழக அரசு 13 லட்சம் ரூபாய் நிர்ணயித்திருக்கிறது. இதனால் கட்டடத்தின் மதிப்பு 2 மடங்கு உயர்த்தப்பட்டு மிகப்பெரிய ஊழல் நடைபெறுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மாநில அரசு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. கடனுதவி திட்டங்கள் குறித்து வங்கியாளர்களிடம் புள்ளிவிவரங்கள் இல்லை. மதிப்பாய்வுக் கூட்டம்
இதனால் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து திண்டுக்கல் மாவட்டத்தில் துணை ஆட்சியரைக் கொண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வுக்கூட்டம் நடத்த அறிவுறுத்தினேன்" என்றார். கம்யூனிஸ்ட் கவுன்சிலருடன் மல்லுக்கட்டிய திமுக கவுன்சிலர்கள்- திண்டுக்கல் மாநகராட்சிக் கூட்ட சலசலப்பு
http://dlvr.it/SrPQFN
http://dlvr.it/SrPQFN
Comments
Post a Comment