Skip to main content

சர்ச்சையைக் கிளப்பிய `கறுப்பு நிற ஆடைக்குத் தடை' உத்தரவு; யூ டர்ன் அடித்த பெரியார் பல்கலைக்கழகம்!

பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று (28.06.2023) பட்டமளிப்பு விழா நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கவிருக்கிறார். வள்ளலார் குறித்து சமீபத்தில் ஆளுநர் பேசியதும், தொடர்ச்சியாகப் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சனாதனம் குறித்தும் ஆளுநர் பேசிவரும் கருத்துகளும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று பட்டமளிப்பு விழாவுக்காக சேலத்துக்குச் செல்லும் ஆளுநருக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கறுப்புக்கொடி காட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் திட்டமிட்டிருக்கின்றன. இதற்காக ‘ஆளுநரின் அத்துமீறல் எதிர்ப்பு கூட்டியக்கம்’ என்ற பெயரில் புதிய கூட்டமைப்பே உருவாக்கப்பட்டிருக்கிறது.ஆளுநர் ஆர்.என்.ரவிசாதிப்பாகுபாடு, சர்ச்சைக் கேள்வி, பாலியல் வழக்கு... பெரியார் பல்கலைக் ‘கலகம்’ இந்த நிலையில் பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தருவோர் கறுப்புச் சட்டை அணிந்துவரக் கூடாது என்றும், கைப்பேசி எடுத்து வரக் கூடாது என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியது. ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக யாராவது கறுப்புச் சட்டை அணிந்துவரக்கூடும் என்று காவல்துறை எச்சரித்ததன் அடிப்படையில், பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இந்தச் சுற்றறிக்கையை அனுப்பியதாகக் கூறப்பட்டது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. `பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயே கறுப்புச் சட்டை அணிந்துவரக் கூடாது எனப் பல்கலைக்கழகத்துக்குக் காவல்துறை எப்படி அறிவுறுத்தலாம்... காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது?' என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட மதுரை எம்.பி சு.வெங்கடேசன், `ஆளுநர் வருகைதரும் பெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கு மாணவர்கள் கறுப்பு நிற ஆடை அணிந்துவரக் கூடாதென்று சேலம் மாவட்டக் காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது. பெரியாரின் கைத்தடி அடித்து விரட்டிய சனாதனத்தை, ஆளுநர் அணிந்துவரக் கூடாதென்றும் காவல்துறை அறிவுறுத்த வேண்டுகிறேன்’ என்று கூறியிருந்தார். இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் டேவிட்டைத் தொடர்புகொண்டு பேசினோம். ``ஆளுநர் என்பவர் அரசியலமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்படாமல் இருக்கலாம் என எங்கும் சொல்லவில்லை. ஆனால், ஆர்.என்.ரவி எங்கு சென்றாலும் சனாதனத்தைப் பேசுவதையே வேலையாக வைத்திருக்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். தமிழ்நாட்டு மக்களையும், தமிழ்நாட்டு அரசையும் மதிப்பதே இல்லை. எனவேதான் சேலத்துக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க முடிவெடுத்திருக்கிறோம். இதையடுத்து பட்டமளிப்பு விழாவுக்கு யாருமே கறுப்புச் சட்டையே போட்டு வரக் கூடாது என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. இது ஏற்புடையதல்ல” என்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி இது தொடர்பாக சேலம் மாவட்டக் காவல்துறை வட்டாரத்திலும் விசாரித்தோம். ``பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு காவல்துறை இத்தகைய உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை, அவர்களாகவே சுற்றறிக்கை அனுப்பியிருக்கலாம்" என்கின்றனர். ஆனால், ஆளுநர் வருகையையொட்டி வாய்மொழியாக இடப்பட்ட அறிவுரையாக இது இருக்கலாம் என்றும் போலீஸார் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட்டன. இந்த நிலையில், அந்தச் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறது பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி அந்தச் சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.பட்டமளிப்பு விழா; ஆளுநர் வருகை - கறுப்பு நிற ஆடை அணிந்து வர தடைவிதித்த `பெரியார்' பல்கலைக்கழகம்!
http://dlvr.it/SrLclt

Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...