Skip to main content

தரயட... கரணஙகள சகசசகள தவரகக வழகள - மரததவ வளககம!

கழுத்துப் பகுதியில் கட்டி, அதீத உடல்பருமன் ஆகியவற்றுக்கு ஆளானவர்களுக்கு அது தைராய்டு பிரச்னை எனச் சொல்லிக் கேட்டிருப்போம். தைராய்டு குறித்த முழுமையான விழிப்புணர்வு பரவலாக ஏற்படவில்லை. தைராய்டு பிரச்னை ஏன் ஏற்படுகிறது, எப்படித் தடுப்பது என விளக்குகிறார் திருச்சி, காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் அனீஸ்.

Dr. B. Anis. Oncology Dept, M.B.B.S., M.S., M.R.C.S., M.C.H. Kauvery Hospital, Trichy

தைராய்டு கிளாண்ட்

``நமது உடலில் பிட்யூட்டரி கிளாண்ட், அட்ரீனல் கிளாண்ட், கயைணம் என பல எண்டோகிரைன் கிளாண்ட்கள் (Endocrine gland) இருக்கின்றன. அவற்றில் தைராய்டு கிளாண்டும் ஒன்று. இது நமது கழுத்துப்பகுதியில் சுவாசக் குழாய்க்கு மேலேயும், பேச்சுக்குழாய்க்கு கீழேயும் இருக்கும். இது ரைட் லோப், லெஃப்ட் லோப், இஸ்துமஸ் என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.

தைராய்டு கிளாண்டின் முக்கியமான பணி, தைராக்சின் என்ற ஹார்மோனை சுரப்பது. தாயின் கருவறையில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் தொடங்கி, உணவு செரிமானம், இதய செயல்பாடு என மனித உடல் இயக்கத்திற்கு அடிப்படை இந்த தைராக்சின் ஹார்மோன்.

பெண்களுக்கே அதிக பாதிப்பு

தைராய்டு தொடர்பான பாதிப்புகள் ஆண்களைவிட, பெண்களுக்கே அதிக அளவு ஏற்படுகிறது. தைராய்டு கிளாண்டில் இரண்டு விதமான பிரச்னைகள் ஏற்படலாம். முதலாவது, அதன் செயல்திறனில் ஏற்படும் பாதிப்பு. செயல்திறன் பாதிக்கப்பட்டால் ஹார்மோன் சுரப்பு குறையலாம், அல்லது அதிகரிக்கலாம். ஹார்மோன் குறைவாகச் சுரந்தால் அதனை ஹைப்போதைராய்டிசம் என்றும், அதிகமான ஹார்மோன் சுரந்தால் அதை ஹைப்பர்தைராய்டிசம் என்றும் கூறுவார்கள். செயல்திறன் பாதிப்பிற்கான காரணத்தைக் கண்டறிந்து அவற்றை மருந்துகள் மூலமே குணப்படுத்திவிட முடியும்.

தைராய்டு

பெரும்பாலானோருக்கு ஹைப்போ தைராய்டிசம் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் அயோடின் குறைபாடு. தைராக்சின் உற்பத்திக்கு அயோடின் சத்து அத்தியாவசியம். இந்தக் குறைபாட்டை போக்கவே அயோடின் கலந்த உப்பை எடுத்துக்கொள்ளச் சொல்கிறோம். கர்ப்பிணிகளுக்கு ஹைப்போ தைராய்டிசம் பிரச்னை இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாகவே கருத்தரித்த பெண்களுக்கு தைராய்டு பரிசோதனை மேற்கொண்டு அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடற்சோர்வு, முகம், கை,கால்கள் வீக்கம், மலச்சிக்கல், பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல்கள் ஏற்படுவது ஆகியவற்றை இந்த ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகள் எனலாம்.

என்ன பாதிப்பு ஏற்படும்?

ஹைப்பர் தைராய்டிச பாதிப்பு ஏற்பட்டால் உடல் எடை குறைவு, கை நடுக்கம், வயிற்றுப்போக்கு, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள், கண் வெள்ளைவிழி இமைகளுக்கு வெளியே வருதல் ஆகிய பிரச்னைகள் எற்படும். இவை தைராய்டு கிளாண்டின் செயல்பாடு பாதிப்பதால் ஏற்படும் விளைவுகள். இரண்டாவது, தைராய்டு பகுதியில் கட்டிகள் ஏற்படலாம். இதனை நாடியுல்ஸ் (Nodule) எனக் கூறுவார்கள். இதில் 85% கட்டிகள் சாதாரண கட்டிகளாக இருக்கும். 15% கேன்சர் கட்டிகளாக இருக்க வாய்ப்புள்ளது. கேன்சர் தவிர்த்த மற்ற கட்டிகள் வர ஹைப்பர் அல்லது ஹைப்போ தைராய்டிசம் பாதிப்புகள் காரணமாக இருக்கலாம்.

தைராய்டு

கழுத்தில் வீக்கம் அல்லது கட்டியுடன் வந்தால் அது பெரும்பாலும் தைராய்டு கட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. இந்தக் கட்டிகள் சிலருக்கு நெஞ்சுக்கூடு வரை கூட நீண்டிருக்க வாய்ப்புகள் அதிகம். இவை பெரும்பாலும் வெளியே தெரியாது. 3 சென்டி மீட்டருக்கு மேல் தைராய்டு கட்டி வளர்ந்தால் அது வெளியே தெரிவதற்கான வாய்ப்பு உள்ளது. தைராய்டு அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு மூன்று முக்கிய மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அதில் முதன்மையானது தைராய்டு புரொஃபைல் டெஸ்ட், டி.எஸ்.எஸ், டி3, டி4 என்ற பரிசோதனைகள் மூலமாக தைராய்டு கிளாண்ட் சரியாகச் செயலாற்றுகிறதா என்பது கண்டறியப்படும். இரண்டாவதாக அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கட்டியின் அளவு, கட்டியின் எண்ணிக்கை, சாதாரண கட்டியா அல்லது கேன்சர் கட்டியா, கேன்சர் கட்டியாக இருந்தால் அருகே உள்ள நெறிக்கட்டிகளுக்கு பரவியிருக்கிறதா என்பது உறுதி செய்யபடும். தைராய்டு கட்டி நெஞ்சுக்கூடு வரை நீண்டிருந்தால் சி.டி ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

உணவுப்பழக்கத்தால் கட்டுப்படுத்தலாம்

மூன்றாது பரிசோதனை, அக்கட்டியில் இருந்து ஊசி மூலம் செல்களை எடுத்து அதனை ஆய்வு செய்வார்கள். இதன் மூலம், ஏற்பட்டுள்ள கட்டி கேன்சர் கட்டியா அல்லது சாதாரண கட்டியா என்பது கண்டறியப்படும். இந்த மூன்று பரிசோதனைகள், மற்றும் கைகளால் தொட்டுப்பார்த்து கட்டியின் தன்மையைக் கண்டறிந்த பிறகே அது கேன்சர் கட்டியா அல்லது சாதாரண கட்டியா என்பது உறுதி செய்யப்படும். சாதாரண கட்டியாக இருந்து, அதன் அளவு 3 சென்டி மீட்டருக்கு கீழே இருந்து, அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கு எந்த மருத்துவ சிகிச்சையும் தேவைப்படாது. அதைத் தொடர்ந்து கண்காணித்தாலே போதுமானது. உணவுப் பழக்கத்தின் மூலம் அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். சாதாரண கட்டியாக இருந்து 3 சென்டி மீட்டருக்கு மேல் வளர்ந்து, பிரச்னை ஏற்பட்டால் அதனை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.

தைராய்டு

கேன்சர் கட்டியாக இருந்தால் கட்டாய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். தைராய்டில் ஏற்படும் கட்டி வளர்ந்து, பேச்சுக்குழாயில் நரம்புகளை பாதித்து குரலில் மாற்றம் ஏற்பட்டால் அது கேன்சர் கட்டியாக இருக்க வாய்ப்புகள் அதிகம். பாப்பிலாரி கார்சினோமா, ஃபாலிக்யூலர் கார்சினோமா, மெடியுலரி மற்றும் அனபிளாஸ்டிக் என நான்கு வகையான கேன்சர்கள் தைராய்டில் ஏற்படலாம். இதில் 80 சதவிகிதம் கேன்சர் பாப்பிலாரி மற்றும் ஃபாலிக்யூலர் கார்சினோமா பாதிப்பு தான் ஏற்படுகிறது.

அயோடின் சத்து அவசியம்!

பாப்பிலாரி, ஃபாலிக்யூலர் கேன்சர் முறையான அறுவை சிகிச்சை மற்றும் ரேடியோ அயோடின் அபிலேஷன் சிகிச்சை மூலம் 90 சதவிகிதத்திற்கும் மேல் நல்லபடியாக குணப்படுத்த முடியும். மீதமுள்ள கேன்சர்களில், வேறு உறுப்புகளுக்கு கேன்சர் பரவினால் அதனை குணப்படுத்த முடியாது. ஆனால் தைராய்டு கேன்சரில், வேறு உறுப்புகளுக்கு கேன்சர் பரவினாலும் சிறந்த சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும்.

அயோடின் உப்பு

தைராய்டை தவிர்க்க சீரான அயோடின் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பச்சைக் காய்கறிகளில் அயோடின் சத்து கூடுதலாக இருப்பதால், அவற்றைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். மேலும், தொண்டைப்பகுதியில் கட்டி போல் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை மேற்கொண்டு தைராய்டு பிரச்னையைத் தீர்க்கலாம்" என்கிறார் மருத்துவர் அனீஸ்.


Comments

Popular posts from this blog

Sundar Pichai: "அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது!"- கூகுளில் 20 வருடங்கள் கடந்த சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டில் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இன்று கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றுபவர். சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகர் ஜவஹர் வித்யாலயாவிலும், மெட்ராஸ் ஐ.ஐ.டி-யின் வனவாணி பள்ளியிலும் படித்தார். பின், ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினீயரிங் படித்தார். அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸும், வார்டன் ஸ்கூலில் எம்.பி.ஏ-வும் முடித்தவர், மெக்கன்சியில் புராடெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் தனது காதலியும் மனைவியுமான அஞ்சலியின் மென்பொருள் நிறுவனமான Intuit-ல் வணிக இயக்க மேலாளராகத் தன் கரியரைத் தொடர்ந்தார். அதன்பின் Accenture நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 2004க்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஆரம்பமானது.சுந்தர் பிச்சை, அஞ்சலி 2004-ல் கூகுள் டூல் பார் (Tool bar) புராடெக்ட் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்தவர், தன்னுடைய திறமையால் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறினார். 2015-ல் கூகுளின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 2019-ல் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ...

`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’

`Black Lives Matter' என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது.அமெரிக்கா - போராட்டம் இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து,...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...