பிரதமர் மோடி கடந்த 23-ம் தேதி அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பிரதமர் மோடியிடம், வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் பத்திரிகையாளர் (The Wall Street Journal) சப்ரினா சித்திக், இந்தியாவில் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ``இந்தியாவில் எந்தவித மத, இன, சாதிப் பாகுபாடுகளுக்கும் இடமில்லை" எனத் தெரிவித்திருந்தார்.மோடி
இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பேசுபொருளானது. அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் சப்ரினா சித்திக்கை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். இந்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் ஜான் கிர்பி,அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் பத்திரிகையாளர் கெல்லி ஓ'டோனல் (Kelly O’Donnell) சக பத்திரிகையாளர் சப்ரினா சித்திக் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தொடர்புகளுக்கான ஒருங்கிணைப்பாளர்,ஜான் கிர்பி``அந்தத் துன்புறுத்தல் பற்றிய தகவல் எங்களுக்குத் தெரியும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த இடத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுவதை வெள்ளை மாளிகை கண்டிக்கிறது. பத்திரிகையாளர்களைத் துன்புறுத்துவது ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது. இந்தச் செயலுக்கு எங்களுடைய கண்டனங்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா மற்றும் எகிப்து பயணத்தை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியா திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.`மோடி தனியாக எதையும் செய்யவில்லை; ஹூஸ்டன் பல்கலை.-யில் தமிழ் இருக்கை’ - அமெரிக்காவில் பிரதமர் உரை
http://dlvr.it/SrLc4J
http://dlvr.it/SrLc4J
Comments
Post a Comment