Skip to main content

அபபல பரடடன கனசர சனடரல (APCC) கழநதகளககன தவர சகசசபபரவ (PICU) ஆரமபம!

தெற்காசியா மற்றும் மத்தியக்கிழக்கு பிராந்தியத்தின் முதல் மற்றும் ஒரே மையமான அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவை (PICU) தொடங்கியிருக்கிறது.

நோயாளிகளுக்கு மிக உயர்ந்த தரத்தில் சிகிச்சையை வழங்க வேண்டுமென்ற அதன் பொறுப்புறுதியை இது மேலும் வலுப்படுத்துகிறது.  குழந்தைகளுக்கான இப்புதிய பிரிவை தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. பி. கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்வில் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட்  - ன் குழு, புற்றுநோயியல் மற்றும் இன்டர்நேஷனல் துறையின் இயக்குனர் திரு. ஹர்ஷத் ரெட்டி, இரத்த புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ரம்யா உப்புலூரி, தீவிர சிகிச்சை சிறப்பு மருத்துவர் டாக்டர். ஸ்ருதி கக்கலாரா, கதிர்வீச்சு புற்றுநோயியல் (குழந்தைகள்) துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஸ்ரீனிவாஸ் சிலுகுரி மற்றும் மூளை – நரம்பியல் அறுவைசிகிச்சை பிரிவின் முதுநிலை நிபுணர் டாக்டர். அரவிந்த் சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்

முழுமையான மற்றும் சிறப்பான புற்றுநோய் சிகிச்சையை குழந்தைகளுக்கு வழங்குவது APCC – ன் நோக்கம் என்பதால், PICU – ன் தொடக்கம் இம்மருத்துவமனைக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கிறது.  பல்வேறு துறைகளைச் சேர்ந்த விரிவான மற்றும் சிறப்பான நிபுணத்துவத்தைக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் சிறப்பு நிபுணர்களை உள்ளடக்கிய மருத்துவக் குழுவை இப்பிரிவு கொண்டிருக்கிறது. ஒரு திரையில் பல தகவலை வழங்கக்கூடிய மல்டிபாரா மானிட்டர்களோடு இணைந்த நிலை 3 திறனுள்ள,  குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. செவிலியர்கள் மற்றும் மருத்துவ துணைப் பணியாளர்களுக்கு இந்த அமைவிடத்திலேயே குழந்தைகளுக்கான மேம்பட்ட உயிர்காப்பு ஆதரவு பயிற்சி திட்டம் (PALS) தொடங்கப்பட்டிருப்பதையும் APCC அறிவித்திருக்கிறது.  இம்மருத்துவமனையைச் சேர்ந்த செவிலியர்கள், மருத்துவ துணைப் பணியாளர்களோடு பிற கிளினிக்குகளில் பணியாற்றும் குழந்தைகளுக்கான செவிலியர்களும் எந்தவொரு அவசர நிலைகளையும் கையாள அவர்களை இப்பயிற்சி திட்டம் தயார் செய்யும்.

தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. பி. கீதா ஜீவன் பேசுகையில், “குழந்தைகளுக்காக புற்றுநோய்க்கு மேம்பட்ட சிகிச்சையை வழங்குவதில் APCC கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை பெரிதும் பாராட்டினார். “அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவை தொடங்கும் இவ்விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது.  இந்தியாவின் மருத்துவ உட்கட்டமைப்பு மற்றும் சிகிச்சை வழங்கலில் தமிழ்நாடு மாநிலம் நீண்ட காலமாக கொண்டிருக்கும் தலைமைத்துவ திறனுக்கு இது மற்றுமொரு புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சிறார்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கான தனது முயற்சிகளில் உயர்நேர்த்தி

கீதா ஜீவன்

நிலையை நோக்கி ஒரு முக்கியமான முன்னேற்ற நடவடிக்கையை இப்புதிய பிரிவை தொடங்கியிருப்பதன் மூலம் APCC எடுத்திருக்கிறது.  மிக நேர்த்தியான புரோட்டான் மற்றும் போட்டான் சிகிச்சைகளை வழங்கி இம்மருத்துவமனை கொண்டிருக்கும் பொறுப்புறுதிக்காக மனமார பாராட்டுகிறேன்.  குழந்தைகளுக்கான ஒரு முழுமையான சிகிச்சைப் பிரிவை இங்கு நிறுவ சமீபத்திய மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மீது அதிகளவு முதலீடு செய்திருப்பது பாராட்டுக்குரியது,” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.  

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் தீவிர சிகிச்சை சிறப்பு மருத்துவர் டாக்டர். ஸ்ருதி கக்கலாரா கூறியதாவது: “குழந்தைகளுக்கான புற்றுநோயியலில் நவீன தொழில்நுட்பத்தையும், சிகிச்சைகளையும் வழங்குவதில் APCC -ல் பெருமிதம் கொள்வோம்.  மேம்பட்ட உயிர்காப்பு ஆதரவு தொழில்நுட்பம் கண்காணிப்பிற்கான சாதனங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் PICU, பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவப் பணியாளர்களைக் கொண்டு 24X7 அடிப்படையில் சேவைகளை வழங்கும் குழந்தைகளுக்கு வரும் புற்றுநோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளுக்கு எதிரான யுத்தத்தில் இப்புதிய பிரிவு, புரட்சிகர மாற்றத்தை சாத்தியமாக்கும்  இச்சிறப்பான தேவையை எமது நோயாளிகளுக்கு இதன்மூலம் வழங்க முடியும் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. PICU வழியாக  குழந்தைகளுக்கான சிறந்த சிகிச்சையை வழங்குவதன் மூலம் பிற புரோட்டான் சிகிச்சைகளை வழங்கும் பிற மையங்களிலிருந்து  நாங்கள் வேறுபட்டு, தனிச்சிறப்போடு செயலாற்றுவோம்.” 

அப்போலோ மருத்துவமனை

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் இரத்த புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ரம்யா உப்புலூரி, இத்தொடக்க விழா நிகழ்வில் கூறியதாவது: “உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சையை வழங்குவதில் PICUs இன்றியமையா பங்காற்றுகின்றன.  குழந்தை நோயாளிகளின் தனித்துவமான தேவைகளுக்கு தீர்வளிக்க பல்வேறு துறைகளில், சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களை உள்ளடக்கிய ஒரு குழு, இப்புதிய பிரிவில் பணியாற்றும்.  மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்ப சாதனங்களும் இங்கு நிறுவப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  குழந்தை நோயாளிகளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு சாதனங்கள் மற்றும் கண்காணிப்பு கருவிகள், மருத்துவ  நிபுணர்களுக்கு பெரிதும் உதவும்.  சிக்கலான மருத்துவ நிலைகளில் உள்ள குழந்தைகளுக்கு விரிவான, மேம்பட்ட சிகிச்சையை வழங்குவதை செவிலியர்கள், குழந்தைகளுக்கான சிறப்பு தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவர்கள் மற்றும் பிற சிறப்பு நிபுணர்களை உள்ளடக்கிய குழு உறுதிசெய்யும்.” 

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட் – ன் குழு புற்றுநோயியல் & இன்டர்நேஷனல் துறையின் இயக்குனர் திரு. ஹர்ஷத் ரெட்டி இந்நிகழ்வில் பேசுகையில், “சாத்தியமுள்ள மிக உயர்ந்த சிகிச்சையை நோயாளிகளுக்கு வழங்க APCC – ல் நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம்.  குழந்தைகளில் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பது மிகவும் நுட்பமான, சிரமமான செயல்முறையாகும்.  புற்றுநோய்க்கான சிகிச்சையை வழங்குவதோடு நிறுத்திவிடாமல், குழந்தைகளுக்கான பிரத்யேக தீவிர சிகிச்சைப்பிரிவை தொடங்கியிருப்பது நோயாளிகளுக்கு மிகச்சிறப்பான சிகிச்சை விளைவுகளை வழங்குவதற்கு எங்களுக்கு உதவும்.  மிக நவீன உட்கட்டமைப்பு வசதிகளையும், தொழில்நுட்பங்களையும் நிறுவி, இந்தியாவிலும் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள நோயாளிகளுக்கு சாத்தியமுள்ள மிக நேர்த்தியான சிகிச்சையை வழங்குவதே அப்போலோவில் எங்களது இலக்காக இருக்கிறது.  குழந்தைகளுக்கு மிக விரிவான, முழுமையான  சிகிச்சையை வழங்குவதற்கு குழந்தைகளுக்கான முதன்மையான சிறப்பு மருத்துவர்கள் குழுவுடனும் மற்றும் பிற மருத்துவ நிபுணர்களுடனும் இணைந்து ஒத்துழைப்புடனும் செயல்பட நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம்.” என்று கூறினார்.

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்

சென்னை ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளால் உருவாக்கப்பட்ட அற்புதமான கலைப்படைப்பை இந்த புதிய PICU பிரிவு கொண்டிருக்கிறது.  “ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியின் கவின் கலைகள் துறையின் தலைவர் டாக்டர். லட்சுமிப்பிரியா டேனியல் அவர்களின் கற்பனாத்திறனால் “நம்பிக்கையின் ஹீரோக்கள்”  (‘Heroes of Hope’) என்ற கருப்பொருளின் கீழ் அழகாக வடிவமைக்கப்பட்ட கலைப்படைப்பிற்கு மாணவிகள் உயிரோட்டத்தை தந்திருக்கின்றன.  குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு தொடக்க நிகழ்வின்போது மாண்புமிகு அமைச்சர் திருமதி. கீதா ஜீவன் இக்கலைப்படைப்பை திறந்து வைத்தார்.

குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் ஓவியம் உட்பட, கலைப்படைப்புகளின் அவசியத்தையும், அதனால் கிடைக்கும் பலன்களையும் ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியின் கவின் கலைகள் துறையின் தலைவர் டாக்டர். லட்சுமி பிரியா டேனியல் வலியுறுத்தினார்.  அவர் பேசுகையில், “அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் இந்த கலைப்படைப்புகளை உருவாக்க இதுவொரு கிளர்ச்சியூட்டும் சிறப்பான வாய்ப்பாகும்.  நோயாளிகளுக்கு அதுவும் குறிப்பாக, குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவில் மிக அதிகமாக தேவைப்படும் நேர்மறை உணர்வையும், தைரியத்தையும், நம்பிக்கையையும் வழங்கி அவர்கள் மனதை அமைதிப்படுத்தும் சிறப்பான திறன் கலைக்கு இருக்கிறது.  குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவில் கலைப்படைப்புகளை இடம்பெறச் செய்வதன் மூலம் நோயாளிகளின் உணர்வுரீதியான நலத்தை பேணி வளர்க்கும் ஒரு நல்ல சூழலை நம்மால் உருவாக்க முடியும்.  நோயாளிகள் மனதில் நேர்மறை உணர்வை இது பதிய வைப்பதோடு, நோய் பாதிப்பிலிருந்து, மீண்டு குணமடைகின்ற அவர்களது ஒட்டுமொத்த செயல்முறையையும் கலை நிச்சயமாக மேம்படுத்தும்.” என்று குறிப்பிட்டார். 

புற்றுநோய் சிகிச்சையில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சையை வழங்குவதற்காக இந்த மிக நவீன பிரிவினை நிறுவியிருப்பதன் வழியாக தனது சேவையின் பரப்பை அப்போலோ கேன்சர் சென்டர் மேலும் விரிவுபடுத்தியிருக்கிறது.  


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...